காப்பி லாலிபாப்



என்னென்ன தேவை?

டார்க் சாக்லெட் பார் - 50 கிராம்,
இன்ஸ்டன்டு காப்பி தூள் - 1 டீஸ்பூன்,
லாலிபாப் சாக்லெட் மோல்டு,
லாலிபாப் ஸ்டிக் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதன் உள்ளே சிறிய பாத்திரத்தை வைத்து சாக்லெட்டை உடைத்தோ அல்லது  துருவியோ போட்டு சூடு செய்யவும். சாக்லெட் முழுவதுமாக உருகியதும், அதில் காப்பி பவுடர் சேர்த்து கிளறி சாக்லெட் மோல்டில் ஊற்றி  கீழே குச்சி சொருகி ஃப்ரிட்ஜில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.