கேக் க்ரீமி லாலிபாப்



என்னென்ன தேவை?

ரெடிமேட் மஃபின் கப் கேக் உதிர்த்தது - 1 கப்,
இனிப்பு விப்பிங் கிரீம் - 3 டேபிள்ஸ்பூன்,
பால் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்,
ஆப்பிள் துருவல் - 1/4 கப்,
மேலே தூவ வெள்ளை சீரக மிட்டாய் - தேவைக்கு,
லாலிபாப் ஸ்டிக்.

எப்படிச் செய்வது?


பவுலில் விப்பிங் கிரீமை சேர்த்து பிளெண்டர் கொண்டு நன்றாக இரு மடங்காக வரும்வரை அடித்துக் கொள்ளவும். அதனுடன் உதிர்த்த  கேக், ஆப்பிள் துருவல், சிறிது விப்பிங் கிரீம் கலந்து உருண்டையாக பிடித்து கீழே ஸ்டிக் சொருகி, மேற்புறம் ஒரு டீஸ்பூன் அளவு  விப்பிங் கிரீம் தடவி அதன் மேலே சீரக மிட்டாய் தூவி ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்து பரிமாறவும்.