கோவைக்காய் சாதம்



என்னென்ன தேவை?

கோவைக்காய் வதக்கலுக்கு...

கோவைக்காய் - 15,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 1,
வெள்ளைப் பூண்டு -  2,
இஞ்சி - 1/4 இஞ்ச்,
எண்ணெய் - தேவைக்கு,
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,
தனி வத்தல் பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - தேவைக்கு,
கறிமசால் பொடி - 1/4டீஸ்பூன்,
கொத்தமல்லி இலை - சிறிது.

எப்படிச் செய்வது?

கோவைக்காயை நன்றாகக் கழுவி வட்ட வட்டமாக, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போடவும். மூன்றாக நறுக்கிய வெள்ளைப்பூண்டை சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். லேசாக நிறம் மாறும் போது வட்டமாக நறுக்கிய கோவைக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.

வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கும் போதே, மஞ்சள் தூள், தனியா தூள், தனி வத்தல் பொடி, உப்புச் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் கறிமசால் பொடி சேர்த்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான கோவைக்காய் வதக்கல் தயார்.

கோவைக்காய் சாதம் செய்ய...


தேவையான கோவைக்காய் வதக்கல் எடுத்து தேவையான ஆற வைத்த சாதத்துடன் கலந்து பரிமாறவும்.