உசிலி  ரைஸ்



சீனி அவரைக்காய் உசிலிக்கு...

என்னென்ன தேவை?

சீனி அவரைக்காய் - 100 கிராம்.

அரைக்க...

ஒரு மணிநேரம் ஊற வைத்த கடலைப் பருப்பு - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு - தேவையான அளவு.

வதக்க...

எண்ணெய் - தேவை க்கு,
பெருஞ் சீரகம் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 6,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள் - 1/2 சிட்டிகை,
கறிவேப் பிலை, தேங்காய்த் துருவல்,
கொத்தமல்லி - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சீனி அவரைக் காயைக் கழுவி பொடியாக நறுக்கி வேக வைக்கவும். ஊற வைத்த கடலைப் பருப்பைக் கழுவி, நீரை வடிகட்டி விட்டு காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை கிள்ளிப் போடவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். அரைத்து வைத்த கடலைப் பருப்பைச் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையெனில் சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அரைத்த கடலைப் பருப்பு, மஞ்சள் நிறம் மாறி வதங்கியதும் வேக வைத்த சீனி அவரைக்காயைச் சேர்க்கவும். தேங்காய்த் துருவல், கொத்தமல்லி இலை சேர்த்துக் கிளறி இறக்கவும். இது சுவையான உசிலி. கிண்ணத்தில் எடுக்கும் போது கடாயில் சிறிது உசிலியை மீதம் வைத்து, அதில் தேவையான அளவு சாதம் சேர்த்துக் கிளறி இறக்கினால் உசிலி ரைஸ் தயார்.