சேப்பங்கிழங்கு சாப்ஸ்



என்னென்ன தேவை?

சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ,
எண்ணெய் - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனி வத்தல் பொடி - 1 டீஸ்பூன்,
கறிமசால் பொடி - 1 டீஸ்பூன்,
பொடி உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


சேப்பங்கிழங்கை கழுவி, தண்ணீர்விட்டு குக்கரில் வேக வைக்கவும். ஆறியதும் தோலெடுத்து நீளமாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய கிழங்கைப் போட்டு அது வெந்து நிறம் மாறியதும் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, கறிமசால் பொடி, உப்பு சேர்த்து  கிண்ணத்தை குலுக்கி கிழங்கு முழுக்க அவை பரவியதும் பரிமாறவும். குழந்தைகள் விரும்பும்படி மொறு மொறுவென இருக்கும்.

மற்றொரு செய்முறை:


என்னென்ன தேவை?

சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ,
எண்ணெய் - தேவைக்கு.

அரைக்க...


தேங்காய் - 1/2 மூடி,
காய்ந்த மிளகாய் - 5,
சீரகம் - 1 டீஸ்பூன்.

வதக்க...

பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிமசால் பொடி - 1 டீஸ்பூன்,
பொடி உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

சேப்பங்கிழங்கை கழுவி தண்ணீர்விட்டு குக்கரில் வேக வைக்கவும். ஆறியதும் தோலெடுத்து நீளமாக வெட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய கிழங்கை போட்டு வெந்து நிறம் மாறியதும் ஒரு கிண்ணத்தில் எடுக்கவும். தாளிக்க எண்ணெயில் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போடவும். அத்துடன் அரைத்தவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் சேப்பங்கிழங்கு, மஞ்சள் தூள், கறிமசால் பொடி, உப்பு சேர்க்கவும்.