வடை மற்றும் சாப்ஸ்



என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு - 1/4 கிலோ,
எண்ணெய் - தேவைக்கு.

அரைத்த மாவுடன் சேர்க்க...

வாழைப் பூ - 1,
தயிர் கலந்த நீர் - தேவைக்கு. (வாழைப்பூவைப் பிரித்து கடைசியில் இதழ் பிரியாமல் கட்டியாக வரும் வரை பிரித்து பொடியாக நறுக்கி, தயிர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். இதை அரைத்த மாவில் சேர்க்கும் போது நீர் இல்லாமல் பிழிந்து சேர்க்க வேண்டும்).
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது),
காய்ந்த மிளகாய் - 3,
உப்பு சிறிதளவு, இஞ்சி -  1/2 இஞ்ச் (பொடியாக நறுக்கியது),
தேங்காய் - 1/4 மூடி (பொடியாக நறுக்கியது),
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது (பொடியாக நறுக்கியது).

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்து எடுக்கவும். தண்ணீர் சேர்க்காமல் காய்ந்த மிளகாயையும் உப்பையும் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். மாவுடன் சேர்க்க வைத்திருக்கும் மற்ற  அனைத்தையும் மாவுடன் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் மாவை உருண்டையாகச் செய்து தட்டி, எண்ணையில் பொரித்து வெந்ததும் திருப்பிப்  போட்டுப் பொரித்து எடுக்கவும். கரகர வாழைப்பூ வடை தயார். இதில் வாழைப்பூவுக்கு பதிலாக, முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிச் சேர்த்து முட்டைக்கோஸ் வடையாகவும்  செய்யலாம்.