உளுந்தம்  பருப்பு  குழம்பு



என்னென்ன தேவை? 

உளுந்தம் பருப்பு - 100 கிராம்,
பெரிய வெங்காயம் - 1 (அல்லது) சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 2,
தக்காளி - 1,
கேரட் - 1,
சிறிய புடலங்காய் - 1,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
உப்பு -  தேவையான அளவு,
நார்த்தங்காய் ஊறுகாய் - 1 துண்டு.

அரைக்க... 

தேங்காய் - 1/4 மூடி,
புளி - பெரிய கோலிக்குண்டு அளவு,
பச்சை மிளகாய் - 1,
தக்காளி - 1.

தாளிக்க...

எண்ணெய் - தேவைக்கு,
கடுகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத் தூள் - 1/2 சிட்டிகை,
கொத்தமல்லி இலை - தேவைக்கு. 

எப்படிச் செய்வது?

உளுந்தம் பருப்பை கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். தேவையான பொருட்களில் நார்த்தங்காய் ஊறுகாய் தவிர அனைத்தையும் குக்கரில் வதக்கிச் சேர்க்கவும். பிறகு, காய்களையும் நறுக்கிச் சேர்த்து, பருப்பையும் குக்கரில் சேர்க்கவும். அத்துடன் அரைக்க வேண்டியவற்றை அரைத்துச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி வெயிட் போடவும். இரண்டுமுறை விசில் அடித்ததும் இறக்கவும். அதில் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, நார்த்தங்காய் ஊறுகாயை நன்றாக கைகளால் மசித்து சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான உளுந்தம் பருப்பு குழம்பு தயார்.