பச்சி புலுசு



என்னென்ன தேவை?

சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 4,
தக்காளி - 2,
புளி - புளியங்கொட்டை அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, உப்பு - தேவையான அளவு,
துருவிய தேங்காய் - 1/4 மூடி.

எப்படிச் செய்வது?

புளியை நீர் விட்டு, ஊறவிட்டு, நன்றாகப் பிசைந்து அதன் நீரை எடுத்துக் கொள்ளவும். தேங்காய் தவிர மற்ற அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளி நீருடன் இவற்றைக் கலந்து கைகளால் நன்றாகப் பிசைந்து, கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். இதை சாதத்தில் பிசைந்து சாப்பிட தனி ருசியாக இருக்கும்.ஸ்டவ்வில் வைத்து சூடுபடுத்தவோ, சமைக்கவோ வேண்டாம். பச்சையாகவே தயாரிப்பதால் இது ‘பச்சி புலுசு’ எனப்படும். மூன்று மணிநேரத்துக்குள் உபயோகிக்க வேண்டும்.