தவால் வடை



என்னென்ன தேவை?

கடலை மாவு - 100 கிராம்,
பச்சரிசி மாவு - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது),
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி இலை - சிறிது,
தனி வத்தல் பொடி -  1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய தேங்காய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மேற்குறிப்பிட்ட அனைத்தையும் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந் ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் விடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
ருசியான தவால் வடை தயார்.