தாளித்த கொழுக்கட்டை



என்னென்ன தேவை?
 
இட்லி அரிசி - 200 கிராம்.

தாளிக்க...

எண்ணெய் - தேவையான அளவு,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
மிளகு - 6,
பச்சை மிளகாய் - 2,
காய்ந்த மிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிது,
பொடியாக நறுக்கிய தேங்காய் - 1/2 மூடி,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் விட்டு இட்லிக்கு அரைப்பது போல் ஆனால், கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். எடுப்பதற்கு முன் உப்பு சேர்த்து அரைத்துத் தனியே எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, மேற்குறிப்பிட்ட அனைத்தையும் தாளித்து, தேங்காய் சேர்த்து, அரைத்த அரிசி மாவைச் சேர்த்து இன்னும் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும். தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும். ஆறும்போதே சிறிய உருண்டைகளாக எடுத்து கொழுக்கட்டை பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைத்து இறக்கவும். தாளித்த கொழுக்கட்டை ருசியுடன் தயார்.