சோயா - பீன்ஸ் உசிலி



என்னென்ன தேவை?

சோயா தானியம் - 1 கப்,
பீன்ஸ் (பொடியாக அரிந்தது) - 1/2 கப்,
துவரம் பருப்பு - 1/2 கப்,
காய்ந்த மிளகாய் - 4,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

பீன்ஸை பொடியாக அரிந்து வேக வைத்துக் கொள்ளவும். சோயாவையும் துவரம் பருப்பையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். சோயா, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம்,  மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். இக்கலவையை இட்லி தட்டில் ஆவியில் வேக வைத்து ஆற விட்டு, உதிர்த்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெந்து உதிர்த்த சோயா கலவையை போடவும். அதன் மேல் வேக வைத்த பீன்ஸை போட்டு கலந்தால் சோயா பீன்ஸ் உசிலி ரெடி.