சோயா பக்கோடா



என்னென்ன தேவை?

சோயா மாவு - 1/2 கப்,
கடலை மாவு - 1/2 கப்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்,
கொத்தமல்லி - சிறிதளவு,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
இஞ்சி - சிறு துண்டு,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியதாக நறுக்கவும். இத்துடன் மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். மாவுகளை இக்கலவையில் சேர்த்து தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்துக்குப் பிசையவும். எண்ணெயை சூடாக்கி மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போடவும்.