சோயா கட்லெட்



என்னென்ன தேவை?

சோயா கிரானுல்ஸ் - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 1,
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடை மிளகாய் - 1,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சோயா கிரானுல்ஸை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதில் மீதமுள்ள காய்கறிகளை போட்டு உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். அத்துடன் சோயா கிரானுல்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, வடை போல் தட்டி எண்ணெய் தடவிய தவாவில் சுட்டு எடுக்கவும். தக்காளி சாஸு டன் பரிமாறவும்.