டோஃபு சாண்ட்விச்



என்னென்ன தேவை?

டோஃபு (உதிர்த்தது) - 1/2 கப்,
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடை மிளகாய் - 1
சோள முத்துகள் - ஒரு கைப்பிடி,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
பிரெட் துண்டுகள் - 4.

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், பொடியாக அரிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு அதில் பொடியாக அரிந்த குடை மிளகாய், கேரட், சோள முத்துகள் சேர்த்து, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அத்துடன் உதிர்த்த டோஃபுவை சேர்த்து கிளறவும். டோஃபு ஸ்டஃபிங் ரெடி. கலவை நன்கு ஆறியதும் பிரெட் துண்டங்களின் நடுவே வைத்து எண்ணெய் தடவிய தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.