சோயா-சப்போட்டா மில்க்ேஷக்



என்னென்ன தேவை?

சோயா தானியம் - 1/2 கப்,
சப்போட்டா - 2,
சர்க்கரை - 3 டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் - 2 துளிகள்.

எப்படிச் செய்வது?

சோயாவை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறியதும், நன்றாக மிக்ஸியில் மைய அரைக்கவும். ஒரு வடிகட்டியில் நன்கு வடிகட்டவும். பால் தானாக கீழே விழும். இந்தப் பாலில் சர்க்கரை மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு காய்ச்சவும். ஆறியதும் இத்துடன் நறுக்கிய சப்போட்டா துண்டங்களை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.