டோஃபு ஃப்ரைடு நூடுல்ஸ்



என்னென்ன தேவை?

டோஃபு - 1/2 பாக்கெட் (சோயா பனீர்),
நூடுல்ஸ் - 1 பாக்கெட்,
முட்டைக்கோஸ் - 1/4 கப்,
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி,
கேரட் - 1/4 கப்,
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்,
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் சாஸ் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

காய்கறிகளை பொடியாக அரிந்து கொள்ளவும். நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். டோஃபுவை சிறிய சதுரங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் டோஃபு துண்டங்களை பொரித்து தனியே வைக்கவும். இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும். அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகாய் சாஸ் சேர்த்து கலக்கி விடவும். அதில் பொரித்த டோஃபு, வேக வைத்த நூடுல்ஸ், உப்பு சேர்த்து கலக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.