சோயா லாலிபாப்



என்னென்ன தேவை?

சோயா சன்க்ஸ் - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 1,
பட்டாணி - ஒரு கைப்பிடி,
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடை மிளகாய் - 1,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகுத் தூள்  - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு,
லாலிபாப் போல் செய்ய குச்சிகள் - 6.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். சோயா சன்க்ஸை கொதிக்கும் நீரில் போட்டு பிழிந்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த வெங்காயம், பட்டாணி, குடை மிளகாய், கேரட் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் நன்கு உதிர்த்த சோயா சன்க்ஸ், உப்பு சேர்த்து கலந்து விடவும். நன்கு ஆறியவுடன் உருளைக்கிழங்கு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக்கவும். அதை எண்ணெயில் பொரித்தெடுத்து குச்சியில் குத்தி லாலிபாப் போல் செய்யவும். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.