சோயா வடை



என்னென்ன தேவை?

சோயா தானியம் - 1/2 கப்,
கடலைப் பருப்பு - 1/2 கப்,
வெங்காயம் - 1,
காய்ந்த மிளகாய் - 3,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சோயாவை 3 மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப் பருப்பை 1/2 மணி நேரம் ஊற விடவும். சோயாவையும் கடலைப் பருப்பையும் தண்ணீர் வடிகட்டி, அத்துடன் காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில் கறிவேப்பிலை சேர்த்து கலந்து வைக்கவும். எண்ணெயை சூடாக்கி கலவையை வடைகளாகத் தட்டி பொரித்தெடுக்கவும்.