நடிகரின் காதலிக்கு நடிகை அனுப்பிய தூது





‘பட்டத்து எலிபென்ட்’ படம் ஹிட்டாகும், கோலிவுட்டில் ரவுண்டு வந்து, லட்சக்கணக்கில் கல்லா கட்டுவோம் என்று கனவு கண்டிருந்த ‘ஆக்ஷன் கிங்’ மகள், ரிலீசுக்குப் பிறகு மனசொடிந்து காணப் படுகிறாராம். புதுப்படம் ஒப்பந்தமாவது குதிரைக்கொம்பு கதையானதால், டோலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடுகிறார். இதுவரை நல்ல வாய்ப்பு அமையவில்லை என்றாலும், பெற்றோரின் பெயரை நிலைநிறுத்தியே தீருவேன் என்று சபதம் போட்டு, தரமான படத்துக்கு காத்திருக்கிறாராம். இந்நிலையில், நடிகையின் ஒரே தங்கைக்கும் நடிப்பு ஆசை பீறிட்டுக் கிளம்பியுள்ளதாம். அவரும் தமிழில் ஹீரோயினாக நடிப்பதாக தகவல் பரவியுள்ளது.

ட்விட்டர் கணக்கில், தன் வருங்கால காதல் கணவர் குறித்து வெளியாகும் கமெண்டுகளால் உள்ளம் கொதித்த ‘ஹன்ஸ்’ நடிகை, ரசிகர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பது குறித்து வேறுபட்ட மன நிலையில் இருக்கிறாராம். உண்மையிலேயே அவர்கள் தனது எதிர்காலம் குறித்த அக்கறையில் அப்படி கமெண்ட் போடுகிறார்களா? அல்லது அவர்களை வேறு யாராவது உசுப்பேற்றி, இதுபோல் கமெண்ட் அடிக்கச் செய்கிறார்களா என்று தெரியாமல் குழம்பியுள்ளாராம். என்ன சோதனை வந்தாலும் சரி, காதலனை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.



‘பிரியபெல்’ நடிகைக்கு கோலிவுட்டில் வாய்ப்பு இல்லை. டோலிவுட், மல்லுவுட் மட்டுமே சோறு போட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ரிலீசான இந்தி ‘மெட்ராஸ் விரைவுவண்டி’ படத்தில், ‘கான்’ ஹீரோவுடன் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட்டிருந்தார். இதையடுத்து பாலிவுட்டில் தனக்கு ஒரு தனி இடம் கிடைக்கும் என்று நம்பி கட்டியிருந்த கனவுக்கோட்டை, ரிலீசுக்குப் பிறகு இடிந்து தரைமட்டமாகி விட்டது. அவரிடம் பேசுபவர்கள், ‘ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போடறீங்களா?’ என்று கேட்கிறார்களாம். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், இனி ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன் என்பதில் தீர்மானமாக இருக்கும் ‘பிரியபெல்’ நடிகை, பாலிவுட்டில் இருந்து வரும் அழைப்புகளை நிராகரிப்பதில் தீவிரம் காட்டுகிறாராம்.

பெண்மைக்கே உரிய நளினம் எதுவுமின்றி, வறண்ட தேகத்துடன் காணப்படும் ‘அனுஷ்க’ நடிகை, தெலுங்கில் நடிக்கும் இரு படங்களுக்காக ரொம்பவே சிரமப் படுகிறாராம். உடற்பயிற்சி செய்யும் விஷயத்தில் தனக்கு உதவும் ‘யார்யா’ நடிகரையும், தன்னையும் இணைத்து காதல் கிசுகிசு வருவதை அறிந்தும் அறியாதவரைப் போல் காணப்படும் அவர், ‘தாரா’ நடிகையை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். அதாவது, ‘யார்யா’ நடிகருக்கும், ‘தாரா’ நடிகைக்கும் இடையே ஏற்பட்டுள்ள வலுவான நட்பைக் கெடுக்கும் விதத்தில் தனது அணுகுமுறை இருக்காது என்று, தூதுவர் மூலம் விளக்கம் அளித்திருக்கிறாராம்.

தன்னை வளர்த்து ஆளாக்கிய சித்தியுடனும், சினிமாவில் ஹீரோ யினாக அறிமுகப்படுத்திய இயக்குநருடனும் ஏற்பட்ட பிரச்னைக்குப் பிறகு ஆந்திரா வில் தலை மறைவு வாழ்க்கை நடத்தி வரும் ‘லி’ நடிகை, கோலிவுட்டைச் சேர்ந்த யாரிடமும்  மனம் திறந்து பேசுவது இல்லையாம். செல்போன் நம்பரை மாற்றிய நடிகை, அதை யாருக்கும் கொடுப்பது இல்லையாம். தன்னை நிறையபேர் உளவு பார்ப்பதாக பயப்படும் நடிகை, தன் இருப்பிடம் குறித்து உதவியாளர்களிடம் கூட சொல்வது இல்லையாம். யாரிடமாவது பேச வேண்டும் என்று நினைத்தால், தன் உதவியாளரின் செல்போன் மூலம் பேசும் நடிகை, அடுத்தமுறை அந்த நம்பருக்கு போன் செய்யும் நபர்களுக்கு சரியான பதில் சொல்வது இல்லையாம். இதனால், நடிகையை தமிழ் மற்றும் தெலுங்கில் புதுப்படத்தில் ஒப்பந்தம் செய்ய பயப்படுகிறார்களாம்.



‘லீடர்’ படத்தைப் பார்த்த ரசிகர்கள், ‘பால்’ நடிகையின் முகபாவனைகள் குறித்து கமெண்ட் அடிக்கிறார்கள். எனினும், அவரை புதுப்படத்தில் ஒப்பந்தம் செய்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் இயக்குநரும், நடிகையும் நெருங்கிய நண்பர்கள். இதனால், முதல்முறையாக அவரை சொந்தக்குரலில் பேச வைத்து அழகு பார்த்துள்ள இயக்குநர், ‘அடுத்த படத்திலும் வாய்ப்பு தருகிறேன். அதில் நீ சொந்தக் குரலில் பாட்டு கூட பாடலாம்’ என்று சொல்லியிருக் கிறாராம். ரசிகர்கள்தான் பாவம்.

‘போர்வெல்’ படத்தில் ‘கருப்பு’ காமெடி நடிகர், கதை நாயகனாக நடிக்கிறார் அல்லவா? இதில் ஹீரோயின் பஞ்சாயத்து விஷயத்தில் நடந்த கூத்துகள் சொல்லி மாளாது. ஹீரோயின் தேடும்போது, காமெடிக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று சொல்லி, பல ஹீரோயின்கள் கதவைச் சாத்திவிட்டார்களாம். ஆனால், ‘சிரிச்சி சிரிச்சி வந்தா சீனாதானா டோய்’ பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ‘ரகசிய’ நடிகை மட்டும், ‘எனக்கு கதையைப் பற்றி சொல்ல வேணாம். கேரக்டர் பற்றி சொல்ல வேணாம். சம்பளம் என்னான்னு சொல்லுங்க. கண்டிப்பா நடிக்கிறேன்’ என்று சொல்லி, தெம்பூட்டினாராம். இதில் பெரிதும் மகிழ்ச்சி அடைந்த இயக்குநர், எவ்வளவு தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நடிகை ரொம்பவும் கூலாக, ‘ஒருநாளைக்கு ஒரு லகரம் கொடுங்க’ என்று கேட்டு, அதிர வைத்திருக்கிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு தெளிவடைந்த இயக்குநர், ‘ரகசிய’ நடிகை கேட்டதைக் கொடுக்க சம்மதித்தாராம். ஷூட்டிங் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.

‘விரல் வித்தை’ நடிகரும், இரண்டெழுத்து ‘வெற்றி’ நடிகரும் நெருங்கிய நண்பர்கள். பல விஷயங்களில் நண்பரின் கொள்கைகளைப் பின்பற்றும் இரண்டாமவர், ஹீரோயினைக் காதலிக்கும் விஷயத்திலும் அவரையே குருவாக நினைக்கிறாராம். ‘லி’ நடிகையுடன் காதல் வதந்தி வந்து பிசுபிசுத்தது. பிறகு வேறொரு நடிகையுடன் கிசுகிசு. இப்போது மலையாள வரவான ‘டைம்’ நடிகையுடன் காதல் கிசுகிசு. இதை மறுத்து அவரது தரப்பில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை. தனக்கான பப்ளிசிட்டியாக நினைக்கும் நடிகர், ‘கிங் குயின்’ படத்தில், தனது நண்பரின் முன்னாள் காதலியுடன் ஜோடி சேர்ந்துள்ள ஸ்டில்களை பொக்கிஷம் போல் பாதுகாக்கிறாராம். அவரைப் பற்றி ஏதாவது சொல்லிவிடுவோம் என்று பயந்து, மீடியாவின் அழைப்புகளை அட்டெண்ட் செய்வது இல்லையாம் நடிகர்.



‘முருங்கைக்காய்’ டைரக்டரின் வாரிசு, பார்க்கத்தான் பரம சாது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டால், கமெண்ட் அடித்தே எதிராளியின் இருப்பிடத்தை காலி செய்ய வைத்து விடுவார். அவருக்கும், டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவருக்கும் காதல் என்றும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கொளுத்திப் போட்டனர். இதையறிந்து ஆவேசப்பட்ட இளம் நடிகர், ‘நான் ரொம்ப சாந்தமான ஆளு. தோழியா பழகிய ஒருத்தர் கூட சேர்த்து கிசுகிசு எழுதறது மகா பாவம். அப்பாவும், அம்மாவும் சினிமா இண்டஸ்ட்ரியில் பெரிய இடத்துல இருந்தவங்க. அவங்க வாரிசைப் பற்றி வதந்தி பரப்பலாமா?’ என்று ஆதங்கப்படுகிறார்.

‘காதல் தோல்வி’ புகழ் ‘தாரா’ நடிகை, ‘சந்த்கோபி’ ஹீரோவுடன் ஜோடி சேரும் படத்துக்கான பூஜையில் கலந்து கொண்டார். அப்போது அவரது இடது கையிலிருந்த ‘பிரபு’ என்ற டாட்டூவை ஒரு போட்டோகிராபர் ‘கிளிக்’ செய்தார். அவரது கணிப்பில், அம்மணி தன்னை அழைத்து அர்ச்சனை செய்வார் என்ற பதற்றம் இருந்ததாம். ஆனால், கடைசிவரை நடிகை போட்டோகிராபரை ஏறெடுத்துப் பார்க்கவில்லையாம். பழைய காதல் முறிந்து, பிறகு ஏற்பட்ட காதலுக்கும் ‘குட் பை’ சொல்லிவிட்ட நடிகை, மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட்ட தாடி இயக்குநரின் பெயரை ஏன் அழிக்காமல் வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுந்தாலும், அதற்கு பதில் சொல்ல ‘தாரா’ தயாராக இல்லை என்பது தான் சந்தேகத்தைக் கிளப்புகிறது.
(படத்தில் இருக்கும் நடிகைகள் தஷூகவுசிக், மிதுனா, அர்ச்சனா ஆகியோருக்கும்  இந்தச் செய்தி களுக்கும் தொடர்பில்லை)
- மாயன்