ஆதலால் காதல் செய்வீர்




பிக் அப், பிரேக் அப் என்று வாழும் கல்லூரி இளைஞர்களின் வாழ்க்கையை அப்பட்டமாகச் சொல்லும் படம். சந்தோஷும், மனீஷா யாதவ்வும் ஒரே கல்லூரி மாணவர்கள். காதலிக்கிறார்கள். அது காமம் வரை செல்கிறது. மனீஷா யாதவ் தாய்மை அடைகிறார். அடுத்த கட்ட நடவடிக்கைக்காக காதலர்கள் எடுக்கும் முடிவு மீதிக் கதை.

புதுமுகம் என்று சொல்ல முடியாதளவுக்கு சந்தோஷ் கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் சந்தோஷ். இதே மாதிரி நடிப்புக்கு தீனி போடக் கூடிய கேரக்டர் கிடைத்தால் சீக்கிரத்தில் திறமையான நடிகைகள் பட்டியலில் மனீஷா யாதவ் இணைவது நிச்சயம். அப்பாக்களாக வரும் ஜெயப்பிரகாஷ், ராம்நாத் ஷெட்டி இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். நடுத்தர அம்மாவின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக வரும் துளசிக்கு மொத்த பாராட்டுகளையும் சொல்லலாம். பூர்ணிமா பாக்யராஜின் கேரக்டர் நைஸ். சூர்யாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கவிதை பாடுகின்றன. யுவன் ஷங்கர்ராஜா இசை ஓகே. இரண்டாம் பாதியில் மனதைப் பிழிகிறார் இயக்குநர் சுசீந்திரன்.