அசினுக்கு டாட்டா ஸ்ருதிக்கு வெல்கம்





கிரிக்கெட் வீரர் அசாருதீனின் வாழ்க்கை படமாகிறது. ஏக்தா கபூர் தயாரிக்கிறார். இதில் அசாரின் காதல் லீலைகளும் இடம்பெறுகிறதாம். அசார் வேடத்தில் நடிக்க அஜய் தேவ்கனிடம் பேச்சு நடக்கிறது.

பிரபுதேவா இயக்கத்தில் சைப் அலிகான் நடிக்க உள்ளார். இப்பட ஷூட்டிங் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தொடங்குகிறது. 2015 ஜனவரியில் படம் ரிலீசாகும். இப்படத்தை தயாரிக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் பிரபுதேவாவுக்கு ரூ.25 கோடி சம்பளம் தர சம்மதித்துள்ளது.

சாஜித் கான் இயக்கும் ‘ஹம்ஷகல்ஸ்’ படத்தில் தமன்னா நடிக்கிறார். சைப் அலிகானுக்கு ஜோடி. ரிதேஷ் தேஷ்முக், பிபாஷா பாசு மற்றொரு ஜோடி. ராம் கபூரும் உள்ளார். இவர்கள் அனைவருமே படத்தில் தலா 3 வேடங்களில் நடிக்கிறார்கள்.

மூளை ஆபரேஷனுக்குப் பிறகு குணமடைந்து வரும் ஹிரித்திக் ரோஷன், விரைவில் ‘பங்க் பங்க்’ பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படம், கமர்ஷியல் காமெடி படமாக இருக்குமாம்.

‘சன்ஜீர்’ படத்தின் விளம்பரத்துக்காக ராம் சரண் தேஜாவுடன் வெஸ்டர்ன் டைப் பாடலுக்கு ஆடியுள்ளார் பிரியங்கா சோப்ரா. போலீஸ் உடையில் ஹாஃப் பேன்ட் அணிந்து பிரியங்கா ஆடியுள்ள கவர்ச்சி ஆட்டம், ரசிகர்களைக் கிறங்கடிக்கும் என்கிறது பட வட்டாரம்.

சல்மான் கானை முழுமையாகப் பிரிந்துவிட்ட கேத்ரினா கைப், ரன்பீருடன் மீண்டும் நெருங்கிவிட்டார். சமீபத்தில் ரன்பீரின் அப்பா ரிஷிகபூர் கொடுத்த பார்ட்டியிலும் கலந்துகொண்டு அவரது பேமிலியுடன் நெருங்கி பழகியுள்ளார்.

‘வெல்கம் 2’ படத்தில் அக¢ஷய்குமார் ஜோடியாக நடிக்க அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அசின் பொலிவு இழந்துவிட்டதாகக் கூறி, ஸ்ருதிஹாசனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க உதவியிருக்கிறார் அக்ஷய் குமார்.
- ஜியா