தலைவா





நல்லவனுக்கு நல்லவனாகவும் கெட்டவனுக்கு கெட்டவனாகவும் வாழும் சத்யராஜ் தன் ஒரே மகன் விஜய்யை வெளிநாட்டுக்கு அனுப்பி பாதுகாக்கிறார். ஒரு கட்டத்தில் தந்தையைப் பார்க்க இந்தியா வருகிறார் விஜய். வந்த இடத்தில் தன் கண்ணெதிரில் வில்லனால் தந்தையை பறிகொடுக்கிறார். தந்தையை காலி பண்ணிய வில்லனை தன் ஸ்டைலில் விஜய் எப்படி பழி வாங்குகிறார் என்பது மீதிக் கதை.

விஜய்க்கு டான்ஸர், டான் என இரண்டு கெட்டப். இரண்டிலும் மிரட்டுகிறார். போலீஸ் - தாதா கதை என்பதால் கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டு போகும் அமலாபால் உள்ளேன் ஐயா என்று குரல் கொடுக்கிறார். சத்யராஜ் மனதைத் தொடுகிறார். வழக்கமான கமர்ஷியல் பாணியில் காமெடி பண்ணாமல் கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார் சந்தானம்.

பொன்வண்ணன், நாசர், ஒய்.ஜி.மகேந்திரன் என அனைவரும் கேரக்டருக்கு ஏற்ப அடக்கி வாசித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவுக்கு பூங்கொத்து. மாஸ் ஹீரோ விஜய்யை கிளாஸ் ஹீரோவாக காண்பித்து அப்ளாஸ் வாங்குகிறார் இயக்குநர் விஜய்.