5 பன்ச்சு




தன் மனைவி மரியாவின் பெயரை இணைத்து, ரவிமரியா ஆனார். மகன் விகாஸ், மகள் லிசி.

பூர்ணம் விஸ்வநாதன், சாருஹாசன், ஜனகராஜ், லூஸ் மோகன் உள்பட 150 நடிகர்களின் குரலில் ‘மிமிக்ரி’ செய்வார். ஒருவரை ஒருமுறை பார்த்த சில நிமிடங்களிலேயே, அவரை அப்படியே ‘இமிடேட்’ செய்யும் திறமை பெற்றவர்.

எம்.எஸ்.டபிள்யூ படித்துள்ளார். மதுரை, தூத்துக்குடி வானொலி நிலையங்களில் பகுதிநேர அறிவிப்பாளராக இருந்தார். தமிழ்நாடு தன்னார்வ நலக்குழுமத்தில், தெற்கு மண்டல அலுவலராகப் பணியாற்றினார். பிறகு விருதுநகர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்ற வந்த வாய்ப்பை உதறினார்.

இயக்குநர் வசந்தபாலனும், இவரும் கல்லூரி நண்பர்கள். எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவியாளராக இருந்தபோது, ‘குஷி’ படத்தில் ஒரு காட்சியில் அறிமுகமானார். பிறகு வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படம், குணச்சித்திரம் பிளஸ் வில்லனாக அடையாளம் காட்டியது.

‘ஆசை ஆசையாய்’, ‘மிளகா’ படங்களை இயக்கியுள்ளார். ‘ஆழ்வார்’, ‘சண்டை’ படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தமிழ், மலையாளத்தில் நடிக்கும் இவர், விஜய்யின் ‘ஜில்லா’ படத்துக்காக மொட்டை போட்டுள்ளார்.
- தேவராஜ்