குரல் His Mind Voice



வணக்come! நான்தான் உங்க பார்த்திfun! நான் ஏதோ வித்தியாசமானவன்னு ஊரெல்லாம் பேசிக்கிறாங்க. ஊருனா கிராமம் இல்ல, சிட்டியிலயுந்தான். சிலபேரு பேசும்போது வந்து, வந்துனு வாயாடுவாங்க. நாம வந்து அதுமாதிரி ஆளுகள்ட்ட வந்து ,சும்மா வந்துபோய் இருக்கறதக்கூட வந்து, கொறச்சுக்கறது வந்து  நல்லது. கொறச்சுக்கறதுன்னா, நாய் மாதிரி இல்ல. சிலபேரு சாலிடா சம்பளம் வாங்குவான். அத லிக்யுடா குடிச்சே காலிபண்ணிடுவான். அப்புறம் குடும்பம் ஜாம் ஆயிடும்.

 வெளிய இவ்ளோ ஆளுக இருக்காங்களே, அவங்களை எல்லாம் தியேட்டருக்கு உள்ள வரவைக்கலாம்னுதான் 'உள்ளே வெளியே' படம் எடுத்தேன். 'ஹவுஸ்ஃபுல்'னு எடுத்தா ஹார்ட் மட்டும்தான் ஃபுல்லாச்சு. கைதட்டல் வாங்கணும்ங்கறதுக்காக கஷ்டப்பட்டு வார்த்தைகளைப் பொறுக்கி, அதுல கொஞ்சம் நறுக்கி, மேடையில உருக்கி பேசவேண்டியிருக்கு. அதுலயும் சிலபேரு முறுக்கிக்கிட்டு கைதட்டமாட்டான்.

செம கட்டைனு கமெண்ட் அடிச்சுட்டு, வௌக்குமாத்துக் கட்டையில அடிவாங்கிட்டு, மரக்கட்டை மாதிரி நிப்பானுக பாருங்க, அவனுக மொகரக் கட்டைய பாக்கணுமே!  துணிக்கடையில கொள்ளையடிச்சா துணிகரம்னு    எழுதற பத்திரிகைகள், நகைக்கடையில திருடுனா நகைகரம்னுதான எழுதணும். போங்கா இருக்கே!

நெல்பா