ஆலமரம்



ஒரு ஊர்ல ஒரு ஆலமரம். அந்த ஆலமரத்தில் ஒரு பேய். இதுதான் காதலிக்க சிறந்த இடம் என்று காதலர்கள் அந்த ஆலமரத்தை லவ்வர்ஸ் ஸ்பாட்டாக செலக்ட் பண்ணுகிறார்கள். நாளொரு வண்ணம் பொழுதொரு காஸ்ட்யூம் என ஜாலியாய் லவ் பண்ணும் காதலர்களுக்கு ஒரு கட்டத்தில் காதல் திகட்டவே கல்யாணம் பண்ணிக் கொள்ள முடிவு செய்கிறார்கள். கல்யாணம் நடந்ததா, இல்லையா என்பது விறுவிறு க்ளைமாக்ஸ்.

புதுமுகம் ஹேமந்த் காதலிக்கும் வேலையை சரியாக செய்திருக்கிறார். பாடல் காட்சியிலும் ஃபாஸ்ட் மூவ் கொடுத்து பெயரைக் காப்பாற்றிக்கொள்கிறார். இந்தப் படத்தை முகம் சுளிக்காமல் பார்க்கும் வகையில்  நாயகி அவந்திகா மோகன் கச்சிதமாக நடித்திருக்கிறார். அழகு கொட்டிக் கிடக்கும் அவந்திகாவை கொஞ்சம் கிளாமராகவும் காட்டியிருக்கலாம்.

 பரட்டைத் தலையுடன் வந்து அரட்டை அடிக்கும் மெய்யப்பன் கொஞ்சம் முயற்சித்தால் பிழைத்துக் கொள்வார். ராம் ஜீவன் இசையில் பாடல்கள் கலக்கல். ஆரம்பக் காட்சியில் ஆலமர விழுதுகளை ஆட்டை விழுங்குவது போல் அமர்க்களமாக ‘கெத்’தாக ஓப்பனிங் கொடுக்கும் இயக்குனர் எஸ்.என்.துரைசிங் அதே ‘கெத்’தை  க்ளைமாக்ஸ் வரை  நீட்டித்திருக்கலாம்.