நிக்கியின் டெக்னிக்!



‘டார்லிங்’ நாயகி நிக்கி கல்ராணியைப் பார்த்தாலே படக்குழு பயந்து ஓடுகிறது. காரணம், யாரைப் பார்த்தாலும் ‘அண்ணா’ என்று சொல்லி விடுகிறார். யார் அவருக்கு இப்படிப் பேச வேண்டும் என்று கற்றுக்கொடுத்தாரோ தெரியவில்லை.

அந்த முகம் தெரியாத நபரை அனைவரும் சபிக்க, அம்மணியோ தனக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோவைக்கூட ‘அண்ணா’ என்று அழைத்து அலற வைக்கிறார். தற்போது ஆதி ஜோடியாக ‘யாகாவாராயினும் நா காக்க’ படத்திலும், பாபி சிம்ஹா ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.