எமியின் அதிரடி தமிழ்ப்பயிற்சி!



‘ஐ’ படத்துக்குப் பிறகு  எமி ஜாக்சன் நடித்து வரும் படங்கள், தனுஷ் ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி 2’, உதயநிதி ஜோடியாக ‘கெத்து’. இதில் ‘கெத்து’ படத்தில் முதல்முறையாக மடிசார் கட்டிக்கொண்டு நடிப்பதாக சொல்லியிருந்தார்.

இயக்குனரிடம் விசாரித்தால், ‘படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் எமி மடிசாரில் வருவார். அதை எதற்கு இவ்வளவு பெரிதாகச் சொன்னார் என்று தெரியவில்லை’ என்றார். எமியிடம் சமீபத்திய அதிரடி மாற்றம், தமிழில் பேச முயற்சி செய்கிறார். ஓரிரு மாதத்தில் தமிழில் சரளமாகப் பொளந்து கட்டுவேன் என்கிறார்.

- தேவா