மறுபடியும் கண்டிஷன் கல்யாணம்!



கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆண்டுகள் எத்தனை ஆனால்தான் என்ன? ‘மணல் கயிறு’ படத்தை மறக்க முடியுமா? திருமணத் தரகராக விசு. எட்டு கண்டிஷன் போட்டு திருமணம் செய்யும் இளைஞனாக எஸ்.வி.சேகர்.

 அதெல்லாம் தமிழின் கிளாசிக் கேரக்டர்கள் இல்லையா? பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையைக் கிளப்பிய ‘மணல் கயிறு’ படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வேகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.ராமநாதன் தயாரிக்கிறார்.

‘யாருடா மகேஷ்?’ படத்தை இயக்கிய மதன்குமார்தான் இயக்குகிறார். டைரக்டரிடம் பேசினோம்.“இது ரீமேக்கா?”“கிட்டத்தட்ட அப்படித்தான். அதே நேரத்தில் இரண்டாம் பாகம்னும் சொல்லலாம். அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் கண்டினியூட்டி இருக்கும். ஆனா கதை அதே கதைதான்.

விசு சாரோட மூலக்கதைக்கு எஸ்.வி.சேகர் திரைக்கதை, வசனம் எழுதுறாரு. அவருக்கு ‘மணல் கயிறு’ மனப்பாடமா தெரியும். இருந்தாலும் ஷாட் பை ஷாட் ஷார்ப்பா பல மாசங்கள் இரவு பகல் பாராம வேலை பார்த்திருக்காரு.”

“அஸ்வின் சேகர்?”“எஸ்.வி.சேகர் சாரோட மகன். கேரியர் பிரேக்குக்காக காத்திருக்காரு. இந்தப் படம் அவருக்கு நிச்சயமா திருப்புமுனையா அமையும்.”“பூர்ணா?”“இந்தப் படத்துலே ஹீரோயின் கேரக்டருக்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கு. சாந்தி கிருஷ்ணா மாதிரி ஹோம்லி ப்ளஸ் குறும்புக் கண்களோட இப்போ யாருன்னு பார்த்தா பூர்ணாதான் செட் ஆகறாங்க. காதல், எமோஷன்னு ரெண்டு ஏரியாவும் கலக்குறாங்க.”
“மியூசிக்?”

“தரண் இசையமைக்கிறார். ‘போடா போடி’ படத்துக்கு இசையமைத்திருந்தாரே அவரேதான். ஆக்சுவலா எங்க பட்ஜெட்டுலே பாங்காக் லொக்கேஷனே இல்லை. ஆனா தரண் போட்டுக் கொடுத்த பாடல்களை கேட்டப்புறம் கொஞ்சம் ரிச்சா பண்ணலாம்னு பாங்காக் போறோம்.”

-எஸ்