இளையராஜாதான் ஹீரோ!



‘தாரை தப்பட்டை’க்குப் பிறகு இளையராஜா இசையமைக்கிறார் என்பதாலேயே ‘கிடா பூசாரி மகுடி’க்கு இண்டஸ்ட்ரியில் நல்ல எதிர்பார்ப்பு.ஹீரோவாக தமிழ் நடிக்கிறார். நாயகி நட்சத்திரா. காமெடிக்கு பவர்ஸ்டாரும், சிங்கம்புலியும். ஒளிப்பதிவு ரவிசீனிவாஸ். பாடல்கள் மு.மேத்தா. கிராமத்து மண்வாசம் வீசும் வீரமான படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஜெயக்குமார் இயக்குகிறார்.

விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை, கெட்டுப்போனவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. கணவன் மனைவிக்கு இடையே சந்தேகக்கோடு விழுந்தால் அது சந்தேகக்கேடாக முடியும் என்பதை ஆணித்தரமாக சொல்லியுள்ளார்களாம்.

‘‘இந்தப் படத்தின் நிஜ கதாநாயகன் இளையராஜா சார்தான். புதுமுகங்கள் நடிக்கிற படம்தானே என்றில்லாமல் அனைத்துப் பாடல்களையும் ஹிட்டாக்கினார். பாடல்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதே வரவேற்பு படத்துக்கும் இருக்கும்’’ என்று நம்பிக்கை தருகிறார் இயக்குனர் ஜெயக்குமார்.

- ரா