காயின் போடத்தான் தோன்றுமா?



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘ஓல்டு ஈஸ் கோல்டு’ செம போல்டு. ஆனாலும் திருமதிகளின் அந்தக்கால கவர்ச்சியை நினைவூட்டி அவர்களின் கணவன்மார்களின் சாபத்துக்கு ஏனய்யா அநியாயமாக ஆளாகிறீர்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

தமிழுக்கு வரும் ஹாலிவுட் நடிகை என்று ஆயா நடிகை படத்தை முழுப்பக்கத்துக்கு போட்டிருக்கிறீரே? ‘பீப் பீப்’பாக உம்மை திட்டித் தீர்த்தேன்.
- அம்பரீஷ், அடையாறு.

‘கரெக்டா காயினை போடு’ என்கிற போட்டோ கமெண்டை இரண்டாவது முறையாக ‘வண்ணத்திரை’யில் வாசிக்கிறேன். நடிகை களின் மத்தியப் பிரதேசத்தைக் கண்டாலே உங்களுக்கு காயின் போடத்தான் தோன்றுமோ?
- சங்கீதா, சிவகாசி.

கூடியவிரைவில் வண்ணத்திரை வாசகர்கள் ஐசியூவில்தான் கிடப்பார்கள் என்று கருதுகிறேன். ‘வெள்ளம் பாய்ந்தபோது, வடிந்தபிறகு’ என்று பி.பி. ஏற்றினால் நாங்கள் என்னதான் ஆவது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

விபத்தில் தனது ஒரு காலை இழந்தாலும் மனம் தளராமல் நடிப்பு, நடனம் என இரு பாதைகளிலும் வலம் வரும் சுதாசந்திரனின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டிய ‘வண்ணத்திரை’க்கு நன்றிகள் பல.
- கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

நடுப்பக்கத்தில் ‘முயலுது முயலு’ என்று குறிப்பிட்டீர்கள். முயல்வது எந்த முயல் என்று தெரியாமல் குழம்பிவிட்டோம்.
- இராம.சந்தானம், மயிலாடுதுறை.

எமி ஜாக்சன் தோசைக்கு அடிமையாவது இருக்கட்டும். அந்த டைட்டிலை தோசைக்கல்லில் வார்த்த உம்ம லே-அவுட் ஆர்ட்டிஸ்டின் கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா?
- ரங்கநாதன், நங்கநல்லூர்.