தேவயானி ரிட்டர்ன்ஸ்! சேச்சி தேசத்து செய்தி



அந்நாளைய கனவுக்கன்னிகளுக்கு ‘கம்பேக்’ கொடுப்பதில் மலையாளத் திரையுலகத்துக்கு ஈடு இணையே இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக நம்மூரில் காதல் கோட்டை கட்டிய தேவயானியை மீண்டும் களத்துக்கு கொண்டு வருகிறார்கள் மலையாளத்தில். ‘மை ஸ்கூல்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் தேவயானிக்குத்தான் வெயிட்ரோலாம்.

சினிமாவைத் துறந்து டீச்சராகப் பணிபுரிந்துகொண்டிருப்பவருக்கு ஏற்ற டைட்டில்தான். சமுத்திரக்கனி, கலாபவன் மணி போன்றோரும் நடிக்கும் இப்படத்துக்கு பிறகு தேவயானி மீண்டும் தென்னிந்தியாவில் ஒரு ரவுண்டு அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.