அபூர்வ ஸ்லோகம்



நவகிரக தோஷம் போக்கும் சவுந்தர்ய லஹரி ஸ்தோத்ரம்

‘நேற்றுபோல் இன்று இல்லை, இன்றுபோல் நாளை இல்லை,’ என்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு வகையும் அனுபவம் தரும். ஆனால், தினந்தோறும் சில பழக்கங்கள் மட்டும் மாறுவதேயில்லை; தொடர்ந்துகொண்டே இருக்கும். இவற்றிலும் குளிப்பது, உணவு எடுத்துக்கொள்வது என்ற தினசரிப் பழக்கங்களும் உடல்நலம் குன்றினால் மாறுபடும்; அல்லது ஓரிரு நாட்களுக்காவது கடைபிடிக்கப்படாமல் இருக்கும்.

ஆனால், இறை வழிபாடு மட்டும் அப்படியல்ல; எந்த நாளிலும், எப்படிப்பட்ட உடல்நிலையிலும் அதனை மேற்கொள்ள முடியும். நீராடிவிட்டு பூஜையறையில் அமர்ந்து அப்படி வழிபாட்டை மேற்கொள்ள முடியாவிட்டாலும், படுத்தபடியாவது பகவான் நாமங்களைச் சொல்லிக்கொண்டிருக்க முடியும்.

இது இப்படியிருக்க, ஒவ்வொரு நாளுக்கும் உரிய ஸ்லோகங்கள் என்று இருக்கின்றன. குறிப்பாக சௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் சிலவற்றை அந்தந்த கிழமைகளில் சொல்வது என்பது மிகவும் விசேஷமானது, நன்மைகள் பல அளிக்கவல்லது. முக்கியமாக நம் வாழ்க்கையில் பல சாதக பாதகங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நவகிரகங்களின் அருளைப் பெற இந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம் என்று பெரியவர்கள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் கீழ்க்காணும் சௌந்தர்ய லஹரி ஸ்லோகங்களை அந்தந்த கிழமைகளில்,12 முறை பாராயணம் செய்யலாம். கூடவே நவகிரக துதிகளையும் சொல்லலாம். செவ்வாய்க்கிழமையில் கூடுதலாக சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் ஒன்றும், ஏழு கிழமைகளுக்கு அப்பாற்பட்ட ராகு கிரகத்துக்கு தனி ஸ்லோகமும் அடுத்து சனிக்கிழமையில் கூடுதலாக சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் ஒன்றும் கேது கிரகத்துக்கு தனி ஸ்லோகமும் கொடுக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக மன்மத என்ற தமிழ்ப் புத்தாண்டு தினத்திலிருந்து தினமும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இதனால் அன்றன்றைய சாதகங்கள் அதிகமாவதும், பாதகங்கள் குறைவதுமாக பல நற்பலன்களை அடைய முடியும்.  

ஞாயிற்றுக்கிழமை
(கல்வி அறிவு பெற)
அஸௌ நாஸாவம்ஸஸ் துஹிநகிரிவம்
ஸத்வஜபடி
த்வதீயோ நேதீய: பலது பலமஸ்மாகமுசிதம்
வஹத்யந்தர்முக்தா: ஸிஸிரகரநிஸ்வாஸகலிதம்
ஸம்ருத்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணி
தர: (61)

பொதுப் பொருள்: பனிமலையரசனின் குலக்கொடியே! இளம் மூங்கில் தண்டைப் போன்ற உன் அழகிய மூக்கின் உள்ளே பளபளக்கின்ற அழகிய முத்துகள் நிறைய இருக்கின்றன போலும்! அதனால்தான் உன் இட நாசித் துவாரத்தின் வழியே வெளியாகும் சந்திர நாடி என்னும் மூச்சுக்காற்று, முத்துகளை வெளியேயும் கொண்டு வருகிறதோ! அத்தகையப் பேரழகு நாசி, எங்களுக்குத் தேவையானதும், விரைவில் பலன் தரக்கூடியதுமான
நன்மைகளை அளித்துக் காக்கட்டும்.

சூரிய கிரக துதி
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.

திங்கட்கிழமை
(அனைவரிடமும் நன்மதிப்புப் பெற)
தநோது க்ஷேமம் நஸ் தவ வதந ஸௌந்தர்யலஹரீ
பரீவாஹ ஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்தஸரணி:

வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபல கபரீ பாரதிமிர
த்விஷாம் ப்ருந்தைர் பந்தீக்ருதமிவ நவீநார்க்க கிரணம் (44)
பராசக்தியே! உன் திருமுகத்தின் அழகு

வெள்ளம் பெருகிப் பொழிவது, பாய்ந்தோடும் தூயநீர் வாய்க்காலைப் போலுள்ளது. உன் கரிய கற்றைக் கூந்தல் என்னும் பலம்மிக்க பகைவர்களால் இருட்ட றையில் அடைத்து வைக்கப்பட்ட இளஞ்சூரியனின் கிரண ஒளியைப் போன்று அது தெரிகிறது. குங்குமம் துலங்கும் அந்த நெற்றி வகிடு எங்களுக்கு எல்லா நலன்களையும் அளித்துக் காக்கட்டும்.

சந்திர கிரக துதிஎங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்ப்பாய் சதுராய் போற்றி.

செவ்வாய்க்கிழமை
(பகைமை நீங்கி வெற்றி உண்டாக)
1. தடில்லேகாதந்வீம் தபநஸஸி வைஸ்வாநரமயீம்
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலாநாம் தவ கலாம்

மஹாபத்மாடவ்யாம் ம்ருதிதமல மாயேந மநஸா
மஹாந்த: பஸ்யந்த: தததி பரமானந்த லஹரீம்  (21)
அன்னையே! ஆறு கமலங்களுக்கு மேலுள்ள ஸஹஸ்ராரம் என்ற கமலத்தில் அமர்ந்ததும்,

சூரியன், சந்திரன், அக்னி என்னும் உருவில் உள்ளதும், மின்னற்கொடி போன்றது உன் கலை. காமம் முதலிய அழுக்குகளும், அவித்யை முதலிய மயக்கங்களும் நீங்கப்பெற்ற தூய்மையான மனத்தினால் மகான்கள் அந்தக் கலையை தியானம் செய்கிறார்கள்: அலையலையாகப் பொங்கியெழும் பேரானந்தத்தை அடைகிறார்கள். அந்தப் பேரின்பத்தை நாங்களும் துய்க்குமாறு அருள்வாய் அன்னையே.

2. விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதிவிரதிம்
விநாஸம் கீநாஸோ பஜதி தநதோ யாதி நிதநம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலிதத்ருஸா
ஸம்ஹாரே அஸ்மிந் விஹரதி ஸதி த்வத்பதிர ஸௌ (26)

பதிவிரதையான தாயே! மகாப் பிரளய காலத்தில் பிரம்மா, விஷ்ணு, யமன், குபேரன், இந்திரர்
முதலான எல்லோருமே மறைகிறார்கள். ஆனால், உனது நாயகனான சதாசிவன் மட்டுமே உன் பதிவிரதா தன்மையால் அந்தப் பிரளய காலத்திலும் அழியாமல் உன்னுடன் இருந்து விளையாடுகிறார்.

அதாவது பிரளய காலத்திலும் கூட சிவனும்,
சக்தியுமாக நீங்கள் அழிவற்று நிலைத்திருப்பீர்கள். உங்களுக்கு நமஸ்காரம்.
செவ்வாய் கிரக துதி

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாதருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு.

ராகு கிரக துதி
அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்யா போற்றி.

புதன் கிழமை
(அனைத்துக் கலைகளிலும் வல்லமையுண்டாக)
ஸவித்ரீபிர்வாசாம் ஸஸிமணிஸிலாபங்கருசிபி:
வஸிந்யாத்யாபி: த்வாம் ஸஹ ஜநநி ஸஞ்சிந்த யதி ய:
ஸ கர்த்தா காவ்யாநாம் பவதி மஹதாம்
பங்கிருசிபி:

வசோபி: வாக்தேவீ வதநகமலாமோத மதுரை:(17)தாயே! நீ வசினி முதலிய எண்வகை சக்திகளுடன் கூடியிருப்பவள். அந்த சக்தி தேவியர் சந்திர காந்தக் கல்லைப் பிளந்தது போல் வெண்மைநிறப் பொலிவைப் பெற்றவர்கள். இத்தகைய வாக் தேவதைகளுடன் கூடிய உன்னை சிந்தித்துத் தொழுபவர் யாராக இருப்பினும், அவர் சரஸ்வதி தேவியின் தாமரை மலர் போன்ற முகத்தின் நறுமணம் மிக்கதும், சொற்சுவை நிரம்பியதுமான காவியங்களைப் படைக்கும் வல்லமை பெற்றவர் ஆவார்.

புதன் துதி
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபகவானே பொன்னடிபோற்றி
பதந் தந்தாள்வாய் பண்ணொளியாளனே
உதவியே அருளும் உத்தமா போற்றி.

வியாழக்கிழமை
(குழந்தை பாக்கியம் பெற)
சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: ஸிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபிந்நாபி: ஸம்போர்நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுஸ் சத்வாரிம்ஸ த்வஸுதல கலாஸ்ரத்ரிவலய
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா:
பரிணதா: (11)

நான்கு சிவசக்கரங்களும், அந்த சிவசக்கரங்களிலிருந்து வேறுபட்ட சக்தி சக்கரங்கள் ஐந்தும் சேர்ந்து ஒன்பதாய் உள்ளதும், பிரபஞ்சத்தின் மூலகாரணமான தத்துவங்களுடன் கூடியதுமான
உன் இருப்பிடமான ஸ்ரீசக்ரத்தின் கோணங்கள்

எட்டுத் தளம், பதினாறு தளம், மூன்று மேகலை வட்டங்கள், மூன்று பிராகாரக் கோடுகள் ஆகியவற்றுடன் கூடி நாற்பத்து நான்கு கோணங்களாக அமைந்துள்ளன.
இத்தகைய புகழ்மிக்க தேவியே போற்றி, போற்றி.வியாழன் துதி
குணமிகு வியாழக் குரு பகவானே
மணவுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரஹஸ்பதி வியாழப் பரகுரு நேசா
க்ரஹ தோஷமின்றி கடாக்ஷித்தருள்வாய்.

வெள்ளிக்கிழமை
(சகல தோஷங்களும் விலக)
அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயநமர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீநாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டிர் தரதலித ஹேமாம்புஜருசி:
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸநிஸயோரந்தர
சரீம் (48)

தாயே! உன் வலது கண் சூரியனாக இருப்பதால் அது பகலையும், உன் இடது கண் சந்திரனாக இருப்பதால் இரவையும் தோற்றுவிக்கிறது. உன்னுடைய மூன்றாவது கண் சற்று மலர்ந்த தங்கத் தாமரை மலர் போலிருப்பதால், இரவுக்கும் பகலுக்கும் இடையேயுள்ள காலை மாலைச் சந்தியா காலங்களை அது அமைக்கிறது. ஆக இந்த எல்லா பொழுதுகளிலும் எந்த தோஷமும் என்னை அண்டாது காப்பாய் தாயே.

சுக்கிர துதி
சுக்கிரமூர்த்தி சுபமிக ஈவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக்கொடுப்பாய் அடியார்க்கருளே.

சனிக்கிழமை
(நோய், கடன் தொல்லை நீங்க)
1. த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேநமநஸா
ஸரீரார்த்தம் ஸம்போரபரமபி ஸங்கே ஹ்ருதம
பூத்யதேதத் த்வத்ரூபம் ஸகலமருணாபம் த்ரிநயநம்
குசாப்யாமாநம்ரம் குடிலஸஸிசூடாலமகுடம்  (23)

அம்பிகையே! என் இதயத்தில் குடிகொண்டு பிரகாசிக்கும் உன் வடிவம் முழுவதும் சிவந்த ஒளியுடனும், முக்கண்களுடனும், இரு தனங்களால் சற்று வளைந்தும், பிறைச்சந்திரனைச் சூடிய திருமுடியுடனும் விளங்குவதால், நீ பரமசிவனின் இடது பாகத்தை அபகரித்துக் கொண்டு, மனம் திருப்தியடையாமல் அவருடைய மற்றொரு பாதியையும் அபகரித்துக் கொண்டாயோ, நீயே முழுமையாக சிவமாக விளங்குகிறாயோ என்று தோன்றுகிறது. உனக்கு நமஸ்காரம்.

2. த்வதந்ய: பாணிப்யாம் அபயவரதோ
தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடிதவராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்ச்சா
ஸமதிகம்
ஸரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ
நிபுணௌ (4)

அம்பிகையே! உன்னைத் தவிர, மற்ற தேவர்
களெல்லாம் அபயம், வரதம் என்னும் ஹஸ்த
முத்திரைகளைக் காட்டுகிறார்கள். நீ ஒருவள்தான் அந்த அபிநயங்களைச் செய்வதில்லை.

ஏனென்றால், உன்னுடைய திருவடிகளே பயத்திலிருந்து
காக்கின்றன. அவையே அவரவர் விரும்பியதற்கு
அதிகமாகவே வரம் அளித்து விடுகின்றன.
உன் திருப்பாதங்களில் தண்டனிட்டு மகிழ்கிறேன்.
கேது துதிகேதுத்தேவே கீர்த்தித் தேவே
பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.