தாளமிசைக்கும் திருநாவுக்கரசர்



பொதுவாகத் திருக்கோயில்களில் தாளமிசைக்கும் திருஞானசம்பந்தர் விக்கிரகங்களாகக் காணப்படும். ஆனால், வித்தியாசமாக திருவீழிமிழலைத் திருக்கோயிலில் திருநாவுக்கரசர் செப்பு படிமம் ஒன்றில் இருகரங்களிலும் தாளக்கருவியை ஏந்தி அவற்றை இசைத்தவண்ணம் காட்சியளிக்கிறார். மற்றும் அவருக்கே உரித்தான உழவாரப்படையையும் கையில் ஏந்தியுள்ளார். இச்சிலை கி.பி.10ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

சூலம் இல்லாத பைரவர்

நகரத்தார் ஆலயங்களில் ஒன்றான சூரக்குடி ஆவுடைநாயகி தேசிகநாத சுவாமி ஆலயத்திலுள்ள பைரவர் சூலத்திற்கு மாற்றாக கதையைக் கையில் ஏந்திக் காட்சியளிக்கிறார்.
- இரா.கணேசன்

வளையல் அம்பிகைகாஞ்சிபுரம் அருகிலுள்ள குரங்கனில் முட்டம் ஊரில் வாலீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள அம்பிகையை வளையம்மை என்கிறார்கள். காரணம் இவர் இடதுகையில் மட்டும் வளையல் அணிந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

புதுமணப் பெண்கள் அம்பாளுக்கு வளையல் அணிவித்து பூஜித்து பின்னர் அதனை தாங்கள் அணிந்துகொண்டால் குழந்தை வரம் கிடைக்குமென்றும், சுகப்பிரசவம் ஆகும் என்பதும் நம்பிக்கை. வாலி, இந்திரன், எமன் மூவரும் தங்களது தோஷம் நீங்குவதற்காக குரங்கு, அணில் மற்றும் காகத்தின் வடிவில் வந்து வழிபட்ட தலம் இது.

அம்பாளின் நாக்கு விழுந்த தலம்கர்நாடகா மாநிலம் தர்மசாலாவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. ‘ஜ்வாலா முகி’ அம்பாள் கோயில். 51 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில் அம்பாளின் நாக்கு விழுந்ததாக ஐதீகம். இங்குள்ள அம்பாளின் கருவறைக்கு வலதுபக்கம் 3 அடிக்கு 3 அடி பரப்பில் சிறிய குளம் உள்ளது.

இதில் தண்ணீர் கொதிப்பதைப்போல் தோன்றும். ஆனால், தண்ணீரை தொட்டால் குளிர்ச்சியாக இருக்கும்! இந்த குளத்தின் அருகே பாறைப் பொந்து ஒன்று உள்ளது. அதில் தீக்குச்சி அல்லது ஊதுவத்தியை ஏற்றினால் ஒரு ஆள் உயரத்திற்கு ‘ஜ்வாலை’ குபீரென்று எழும்பி ஒரு நிமிடம் எரிந்து பின்னர் அணையுமாம். இதனால்தான் இத்தல அம்மனுக்கு ‘ஜ்வாலா முகி’ என்று பெயர் வந்ததாம்.

- கோவீ.இராஜேந்திரன்