அள்ளித்தந்த அமுத விருந்து



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

‘பூக்கள் படும் பாடு’ என்ற பொறுப்பாசிரியர் கட்டுரை அநேக ஆன்மிக அன்பர்களின் உள்ள பொருமலை வெளிப்படுத்தியது தெய்வத்தின் ‘மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா? என கவியரசரின் பாடலும் நினைவுக்கு வந்தது. தணிகை மலை பற்றிய கட்டுரை அதன் தனிப்பெரும் சிறப்புக்களை விளக்குவதாக இருந்தது.
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

‘குங்குமம்’ குறித்த மங்களகரத்தை, மகிமையை, மகத்துவத்தை, ‘மதுரை மீனாட்சி குங்குமம்’ மூலம் தந்த விளக்கம் நெற்றியில் மட்டுமல்ல வெளிச்சம், நேர்த்தி மிக்க ஞானியாகவும் சுடர் வீசியது.
- ஆர்.விநாயக ராமன் செல்வ மருதூர்.

தொன்றுதொட்டு பாரம்பரிய வழிபாடாகத் தொடரும் சாஸ்தா அவதார ரகசியம் தொகுப்பாக்கியதால் அதுவும் தரிசனப்படங்களுடன் தொகுத்த விதம் மனதை ஆனந்தப்பூந்தோப்பாக்கியது.
- ஆர்.உமா ராமர், வாரியூர்.

‘கார்த்திகை முக’ தருணத்தில் ஊர்கள் தோறும் சாஸ்தா கோயில்களில் விழாக்கோலம் குதூகலிக்கும் ஒட்டு மொத்த பலனாக தர்மதாஸ்தா ஐயப்பனுக்காக மாலையிட்டு விரதமிருக்கும்  மாதமாகவும் அமைந்துள்ள நிலையில் சாஸ்தா பக்தி ஸ்பெஷல் தந்துள்ள ஆன்மிகம் ஒரு ‘புக்’ மட்டுமல்ல. எங்களின் லக்!
- ஆர்.ஜி.பாலன், திசையன்விளை.

சோதனைகளை சாதனைகளாக்கும் சக்தி வாய்ந்த அவதாரமாகத் தோன்றிய சாஸ்தாவின் புனித வரலாற்றை ரத்தினச் சுருக்கமாகத் தொகுத்து தாங்கள் வழங்கிய கட்டுரையும், ஏழைப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த தலைமலை சாஸ்தா என்ற மலைக்க வைத்த அபூர்வ கட்டுரையும் சாஸ்தா பக்தி ஸ்பெஷலுக்கு வைர மகுடமாக மின்னின.

தொழுநோயைப் போக்கிய கரும்புளி சாஸ்தா கட்டுரை சிலிர்க்க வைத்து விட்டது. கோர்ட்டில் சாட்சி கூறிய தர்மசாஸ்தா கட்டுரை இக்கட்டில் இறைவன் நேரில் வந்து அருள்புரிவான் என்பதற்கு கட்டியம் கூறியது! மொத்தத்தில் எந்த ஆன்மிக இதழிலும் தர்மசாஸ்தா பற்றி இவ்வளவு அரிய தகவல்கள் வந்ததில்லை எனலாம். சாஸ்தா பக்தி ஸ்பெஷல் சந்தோஷத்தை அள்ளித்தந்த அமுத விருந்து.
- அயன்புரம் த.சத்திய நாராயணன்,

‘வணக்கம் நலம்தானே பகுதியில் பூக்கள் படும் பாடு வித்தியாசமான பார்வை’ கண்டிப்பாக இந்து சமயத்துறையினர் இவற்றை சேகரித்து சென்ட்.... பொடிகள் சிறப்புகள் தயாரித்து விற்கலாம். யோசிப்பார்களா?
- ராஜிராதா, பெங்களூரு.

சுவாமிக்கு சாற்றும் பூக்கள் எவ்வித மாற்றமடைகிறது என்பதை ஆசிரியர் தலையங்கத்தில் ‘பூக்கள் படும் பாடு’ சிந்திக்க வைத்துள்ளார். கார்த்திகை மாதத்தை நினைவூட்டும் சாஸ்தாவின் அழகிய அட்டைப்படம் கண்ணைக் கவர்ந்தது. சாஸ்தாவின் அவதார ரகசியம் மற்றும் பல விளக்கங்களுடன் இதழே மிக்க மணம் கமழ்கிறது. 2019-ம் ஆண்டு பலன்கள் மிகவும் அற்புதம். அனந்தனுக்கு 1000 நாமங்கள் தொடர் மெய்சிலிர்க்க வைக்கிறது. அருமையான பக்தி விஷயங்கள் விளங்கும் ‘ஆன்மிகம் பலன்’ ஒரு வைரப்பெட்டகம்.
- இரா.கல்யாணசுந்தரம், கொளப்பாக்கம்.

 ‘இம்மையும் மறுமையும் மறுபிறப்பும்’ என்று குறளின் குரலாக திருப்பூரார் தந்துள்ள அலசல் ஆன்மிக அகவல். சொர்க்கம் நரகம் குறித்த தர்க்கங்களைத் தாண்டி மானுட குலம்தான் அதற்கான வர்க்கம். பாவ புண்ணியங்களே. அதற்கான மார்க்கம் என்று தீர்க்கமாகத் தந்துள்ள கருத்துக்கள்
இதயங்களுக்கான ஒத்தடங்கள்!
- ஆர்.ஜி.காயத்ரி, மணலிவிளை.

இரட்டை மகிழ்ச்சி. புத்தம் புதிய தகவல்களுடன் சாஸ்தா குறித்த கட்டுரையும் வரும் புத்தாண்டு குறித்த பலன்களையும் வெளியிட்டு ஆன்மிகம் வாசக அன்பர்களுக்கு இரட்டிப்பு மகிழ்வை
வழங்கியமைக்கு பாராட்டுக்கள்.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

‘ஆன்மிகம் பலன்’ சாஸ்தா பக்தி ஸ்பெஷல் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஒரு ஆன்மிக கையேடாகவே அமைந்திருந்தது. அவரைப்பற்றிய விவரமும், விரத முறைகளையும் விரிவாக வெளியிட்டிருந்தது பெரும்பயனாகவே இருந்தது. பக்தர்களின் சார்பில் பாராட்டும் நன்றியும்
தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம், வந்தவாசி.