வைணவ அடியார்கள்




              பராசரபட்டர் 14.6.2011

Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazineபகவத் ராமானுஜரின் முக்கிய சீடரான கூரத்தாழ்வானின் குமாரர், பட்டர் ஆவார். கூரத்தாழ்வான் ஆண்டாள் தம்பதி, ஆழ்வானின் வைராக்கியத்தால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடவில்லை என்றாலும் கூட கருத்தொருமித்த தம்பதிகளாய் வாழ்ந்திருந்தார்கள். இவர்களுக்கு அரங்கனே இரண்டு குமாரர்களை அனுக்ரகித்த விஷயம் மிகவும் ஆச்சர்யமானது. ஆழ்வான் தினமும்
உஞ்சவிருத்தி செய்து அதில் கிடைக்கும் அரிசியைக் கொண்டு அமுதாக்கி தம்பதியர் வாழ்வை நடத்தினர். ஒரு நாள் மழை காரணமாக உஞ்சவிருத்திக்கு செல்லாததால் அரிசி கிடைக்கவில்லை. எனவே தம்பதிகள் உபவாசமிருந்தனர்.

 மாலை நெருங்கிவிட்ட வேளையில் ஆழ்வான் மிகவும் சோர்ந்துவிட்டதைக் கண்ட ஆண்டாள் மிகவும் கவலையுடன் அரங்கனை வேண்டினாள். அச்சமயம் அரங்கனுக்கு ஆராதனை மற்றும் நைவேத்ய வேளை. பூஜை முடிந்த பிறகு பின் ஆலயமணி ஓசையும் நின்று விட்டது. பிறகு சில நொடிகளில் கோயிலிலிருந்து அரங்கனை ஆராதனை செய்யும் பட்டர்கள் பிரசாதங்களை எடுத்து வந்து ஆழ்வானுக்கு அரங்கன் ஆணைப்படி எடுத்து வந்ததாகக் கூறினர். உடன் கூரத்தாழ்வான் ஆண்டாளை நோக்கி, ‘நீ ஏதும் அரங்கனிடம் வேண்டினாயா?’ என்று கடிந்து கொண்டு, வந்த பிரசாதங்களில் இருவரும் சிறிதளவு எடுத்துக் கொண்டு தங்களுக்கு இது போதும் என திருப்பி அனுப்பினர்.

இந்த அரங்கனின் பிரசாதம் மூலமாக ஆண்டாள் சிறிது காலத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தாள். அவர்களே பட்டர் என்ற பராசரபட்டரும், வேதவியாச பட்டரும் ஆவர். அவர்களை திருவரங்க நாயகியே பேணி வளர்த்தாள் என்பதால் பட்டர் அரங்கனின் தத்துப் பிள்ளை என்ற பெருமை பெற்று, எம்பார் சுவாமியை குருவாக அடைந்து பின் தானும் வைணவ சிம்மாசனாதிபதியாக விளங்கினார். இந்த பராசரபட்டரே, பட்டர் என்று அனைவராலும் மிக்க அபிமானத்துடன் அழைக்கப்பட்டார். இவர் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு விளக்கவுரை எழுதியது மிகவும் சிறப்பாக போற்றப்படுகிறது.

திருக்கோஷ்டியூர் நம்பிகள்  2.6.2011

Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazineதிருக்கோஷ்டியூர் நம்பிகள் நித்ய சூரிகளுள் ஒருவரான புண்டரீகர் என்பவரின் அம்சமாக கி.பி. 987ல் (ஸர்வஜித்) வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில், பெரியாழ்வாரின் அபிமானத்திற்குரிய செல்வநம்பியின் வம்சத்தில், காச்யப கோத்திரத்தில் அவதரித்தார். இவருடைய இயற்பெயர் குருகேசன். ஆளவந்தாரின் முக்கிய சீடர். பகவத் ராமானுஜரை 18 முறை திருக்கோஷ்டியூருக்கு வரவழைத்து அவரின் தகுதியை நிர்ணயித்து 18வது முறை அவருக்கு நாரண மந்திரோபதேசம் செய்வித்தவர். பலர் இது பற்றி நம்பிகளை வெறுத்தாலும் சமுதாயத்திற்கு நல்லதொரு ஆசானாக ராமானுஜரை உலகிற்கு எடுத்துக்காட்டிய உத்தமர் இவர் என்றே சொல்ல வேண்டும்.
 எம்.என்.எஸ்.