ஸ்பீக்கரு...
டாஸ்மாக் கடை வாசல்ல நின்னு ஓட்டு சேகரிக்க வேண்டாம் தலைவரே...’’ ‘‘ஏன்யா..?’’ ‘‘நம்மளை போதை அணின்னு பேர் வெச்சு கூப்பிடறாங்க!’’ - ஆர்.சீதாராமன், சீர்காழி.
ெஜயிலில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்துவிட்டு, ரிலீஸ் ஆகி வெளியே வந்து, கட்சியை விட்டுச் சென்ற தம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் தலைவர் அவர்களே...’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
ஒபாமா அட்மின் ஆக இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் மெம்பராக இருக்கும் ஒரே இந்தியர் நம் தலைவரே என்பதை...’’ - அ.ரியாஸ், சேலம்.
தலைவருக்கு வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், டைபாய்டு, சிக்குன் குன்யா எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஒரே சமயத்துல வந்திருக்காம்...’’ ‘‘ஓ... இதான் கூட்டணிக் காய்ச்சலா?’’ - எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

புதுசா கட்சி ஆரம்பிக்கப் போற அந்த ஹீரோ ஆனாலும் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்காரு...’’ ‘‘எப்படிச் சொல்றே?’’ ‘‘கட்சிக்கு தமிழ்ல பேர் வச்சா வரி விலக்கு கிடைக்குமான்னு கேக்கறாரே..!’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
233 தொகுதியிலும் தனித்து போட்டின்னு சொல்ற தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ ‘‘அது போன முறை தலைவர் ஜெயிச்ச தொகுதி. இந்த முறை அந்தத் தொகுதி பக்கம் போக முடியாது இல்லே!’’ - எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
நம்ம தலைவர் விதிமுறைகளை மதிக்கிறவர்னு எப்படிச் சொல்ற?’’ ‘‘பிரசாரத்துக்கு வந்தவங்களுக்கு பிரியாணி பொட்டலத்தைக் குடுத்துட்டு ஆள்காட்டி விரல்ல மை வைக்கிறாரே!’’ - எஸ்.எலிசபெத் ராணி, மதுரை.
|