jokes



‘‘கூட்டணித் தலைவர்களோடு செல்ஃபி எடுக்கும்போது எங்கள் தலைவருக்கு சரியாக போஸ் கொடுக்கத் தெரியவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவருக்கு சீட் ஒதுக்காத அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!’’

‘‘கூட்டணியில் சேர்ந்ததுல இருந்து இப்படித்தாங்க... வீட்டுலகூட மனைவி, பசங்க கைகளை ஒருத்தரோட ஒருத்தர் உயர்த்திப் பிடிச்சிக்கிட்டுதான் நடக்கணும்னு அடம் பிடிக்கறார்!’’



‘‘எங்கள் தலைவருக்கு சீட் இல்லை என்பதை நேரடியாகச் சொல்லிவிடுங்கள். அதை விட்டுவிட்டு, நேர்காணலுக்குக் கூப்பிட்டு 24ம் வாய்ப்பாட்டை வேகமாகச் சொல்லச் சொல்லி டார்ச்சர் கொடுக்காதீர்கள்!’’

- எஸ்.ராமன், சென்னை-17.