ஸ்பீக்கரு...
எல்லாம் கிடைக்கும்னு சொல்றாங்களே... இதுல வாங்கிடலாமாய்யா?’’ ‘‘ஐயோ தலைவரே! ஃப்ளிப்கார்ட்ல ஜாமீன் எல்லாம் கிடைக்காது...’’ - அ.ரியாஸ், சேலம்.
ஏன் கபாலி ராத்திரி பத்து மணிக்கு மேல திருடப் போக மாட்டேங்கறே..?’’ ‘‘தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகிடுமே ஏட்டய்யா... அதனாலதான்!’’ - எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
இந்த டாக்டர் அரசியல்ல இருக்கார்னு எப்படிக் கண்டு பிடிச்சீங்க?’’ ‘‘ஆபரேஷன் முடிஞ்சதும் தையல் போடறதுக்கு பதிலா ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பிட்டாரே!’’ - அஜித், சென்னை-126.

தலைவர் தெளிவா பேசுறதா வாட்ஸ்அப்ல போட்டிருக்காங்க...’’ ‘‘அதான் சொன்னேனே... வாட்ஸ்அப்ல நிறைய வதந்திகள் வருதுன்னு!’’ - தாமு, தஞ்சாவூர்.
குடிச்சிட்டு மேடையில கன்னாபின்னான்னு பேச வேண்டாம்னு சொன்னா கேட்டீங்களா தலைவரே..?’’ ‘‘ஏன்யா... என்ன ஆச்சு?’’ ‘‘உங்க மேல ‘மது நல வழக்கு’ போட்டுட்டாங்க...’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
‘‘மேடை ஏறினால் ‘பாட்டா’வுக்கும் தேர்தல் நெருங்கினால் ‘நோட்டா’வுக்கும் பயப்படும் தலைவர் அவர்களே...’’ - வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
‘‘இப்போது இந்த வேட்பாளரை அடித்து தலைவர் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைப்பார்!’’ - எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
|