நம்பர் 1 ரேஸ் வேண்டவே வேண்டாம்!
தடாலடி டாப்ஸி
டாப்ஸியிடம் எதைப்பற்றியும் பேசலாம். பாப்கார்ன் போல் பொறிந்து வெடிக்கும் ஆங்கிலத்தில், மனதில் பட்டதை கொட்டிவிடுவார். தெலுங்கில் ராணாவுடன் ‘காஸி’, இந்தியில் ‘ரன்னிங் ஷாதி டாட் காம்’, ‘ஆக்ரா கா டாப்ரா’ தவிர அமிதாப்புடன் ‘பிங்க்’ என டாப்ஸி பன்னு இப்போ ரொம்ப பிஸி பொண்ணு. சினிமா தவிர தங்கை ஷாகுன் பன்னுவுடன் இணைந்து நடத்தும் ‘வெட்டிங் ஃபேக்டரி’ என்ற ஈவென்ட் மேனேஜ்மென்ட் மூலம் இதுவரை 20 கல்யாணங்களை நடத்திய டாப் மகிழ்ச்சி டாப்ஸியிடம்.

‘‘காஞ்சனா 2’வுக்குப் பிறகு தமிழ்ல ஆளையே காணோம்... இப்படி இருந்தா எப்படி டாப்ஸி?’’ ‘‘இதையேதான் என் ஃப்ரெண்ட்ஸும் கேட்குறாங்க. ‘எந்த மொழினாலும் ஹீரோயின்களோட கேரியர் ரொம்ப குறுகிய காலம்தான். அடுத்தடுத்து நிறைய படம் பண்ண வேண்டியதுதானே’னு அட்வைஸ் மழை பொழியுறாங்க. அப்படியெல்லாம் பண்றதில் எனக்கு இஷ்டமில்ல. தமிழாவது பரவாயில்ல. தெலுங்கில் ரெண்டு வருஷத்துக்குப் பிறகு இப்ப படம் பண்றேன். எல்லா மொழியிலும் தொடர்ந்து படங்கள் பண்ணணும்தான்... ஆனா, எண்ணிக்கைக்காக அவசரப்பட்டு படங்கள் பண்ண விரும்பல. நல்ல கேரக்டருக்காக எவ்வளவு நாள் வேணாலும் காத்திருக்கலாம். நம்பர் ஒன் ரேஸில் நானும் ஓடணும்னு விரும்பல. அதில் எனக்கு இஷ்டமும் இல்ல. தெலுங்கில் எப்பவும் என்னை ஒரு ‘கிளாமர் டால்’ போலத்தான் பார்க்குறாங்க. ரொம்ப வெயிட்டான ரோல் எல்லாம் பண்ணினதில்ல. தமிழ்ல கூட ஹீரோயின் ஸ்கோப் உள்ள கேரக்டர்கள் கம்மியாதான் பண்ணியிருக்கேன். ‘டாப்ஸி நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி’னு நினைக்கக் கூடிய அளவுக்கு கேரக்டர்கள் இந்தியில்தான் செட் ஆகுது. அதனாலதான் இந்திப் படங்கள் பண்றதை விரும்புறேன்!’’
‘‘அப்போ சென்னையை மறந்துட்டீங்களா?’’ ‘‘சென்னையை எப்படி பாஸ் மறக்க முடியும்? தமிழ்ல ஜெய்யோட ஒரு படம் பண்ணியிருக்கேன். ‘நான் சிகப்பு மனிதன்’ திரு இயக்கி யிருக்கார். கிராமத்துப் பொண்ணு கேரக்டர் பண்ணியிருக்கேன். படத்துக்கு டைட்டில் இன்னும் வைக்கல. தமிழ் சினிமால நான் யாரோடவும் அடிக்கடி கான்டாக்ட்ல இருக்கறதில்லை. அதான் நான் வர்றது, போறதுனு எதுவுமே தெரியறதில்லை. தமிழ்னு இல்லை, இந்தி, தெலுங்கில் கூட எனக்கு சினிமா ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்லை. நான் உண்டு... என் வேலை உண்டு. அவ்வளவுதான்!’’
‘‘ட்விட்டர்ல அமிதாப் கூட எடுத்த செல்ஃபியெல்லாம் போட்டு கலக்கிட்டிருக்கீங்களே...’’ ‘‘தேங்க் யூ! அமிதாப்ஜி ராக் ஸ்டார். ‘பிங்க்’ ஷூட்டிங்ல எடுத்த படங்கள் அதெல்லாம். அவரோட நடிக்கற ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத மொமன்ட். நான் டெல்லியில் ஸ்கூல் படிக்கும் போதிருந்து அவரோட தீவிர ஃபேன். இந்தியில் நான் அக்ஷய் குமாருடன் நடிச்ச ‘பேபி’ படத்தை அவர் பார்த்திருக்கார். ‘நல்லா நடிச்சிருந்தே’னு பாராட்டினார். இந்த வயசிலும் செம கலகலப்பா, எனர்ஜியா இருக்கார். நானெல்லாம் நாற்பது வயசுல கூட அவரை மாதிரி எனர்ஜியோட நடிப்பேனாங்கறது டவுட்தான்!’’
‘‘செல்வராகவனின் ‘கான்’ ட்ராப் ஆனதில் வருத்தம் இருக்கா?’’ ‘‘செல்வராகவன் சாரோட படங்கள் எனக்குப் பிடிக்கும். ‘கான்’ படம் ட்ராப் ஆனதுக்கு எந்த விதத்திலும் நான் காரணமில்ல. அதனால எனக்கு வருத்தமில்ல. செல்வராகவன் சார் மறுபடியும் அந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது எப்போ கால்ஷீட் கேட்டாலும் கொடுக்க ரெடியா இருக்கேன்!’’

‘‘நீங்க ஒரு பைக் ரேஸ் பிரியை...’’ ‘‘ஆமா, எல்லா பைக்கும் ட்ரைவ் பண்ணுவேன். 18 வயசுலயே பைக் ஓட்ட ஆரம்பிச்சிட்டேன். ஹோண்டா பைக்கோட அம்பாசிடராவும் இப்போ இருக்கறதால, அடிக்கடி பைக்லயே வெளியூர் போயிடுவேன். ‘ஆடுகளம்’ முடிச்சிட்டு தெலுங்கில் ‘மிஸ்டர் பெர்ஃபெக்ட்’னு ஒரு படம் பண்ணினேன். அதில் நான் பைக் ஓட்டுற காட்சியை வச்சிருந்தாங்க. ஆனா, ரேஸ்ல கலந்துக்கிட்டு அஜித் சார் மாதிரி ஆகணும்னு எல்லாம் ஆசை இல்ல. இட்ஸ் எ ஹாபி!’’
‘‘ ‘வெட்டிங் ஃபேக்டரி’...’’ ‘‘ஆமாம். அது என்னோட ஈவென்ட் மேேனஜ்மென்ட் கம்பெனி. என்னோட ஃப்ரெண்ட் ஃபராஹ் பர்வரேஷ், என் தங்கை ஷாகுன், நான் மூணு பேர் சேர்ந்து இதை ஆரம்பிச்சோம். வெட்டிங்ல ஏ டு இசட் எல்லா வொர்க்கும் ஒரு பேக்கேஜா எடுத்துப் பண்றோம். இனிமே என்னைப் பார்த்து எப்ப கல்யாணம்னு கேட்டா, ‘அடுத்த மாசம் ஒண்ணு... அதுக்கு அடுத்த மாசம் இன்னொண்ணு’னு லிஸ்ட் வாசிப்பேன். எல்லாத்தையும் எங்க வீட்டுக் கல்யாணமா கவனம் எடுத்துப் பண்றோம். ஷாகுன்தான் ஃபுல் டைமா இதை கவனிக்கிறா. சினிமாவும் நடிப்பும் என் வாழ்க்கையோட ஒரு பகுதிதான். நடிக்கற நேரம் போக, மத்த நேரம் ஃபேமிலி, ஹாபி, இந்த மாதிரி ஒரு வொர்க்னு இருந்தாதான் வாழ்க்கை சுவாரசியமாகும். சினிமா டென்ஷன்ல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுறதுக்கு இந்த ஈவென்ட் வொர்க் ரொம்ப உதவியா இருக்கு!’’
‘‘டூ லேட்! சரி, இந்த சம்மரை எப்படி சமாளிக்கப் போறீங்க?’’ ‘‘சம்மர்னாலே நான் மாலத்தீவுக்கு எஸ்கேப் ஆகிடுவேன். என்னோட ரசிகர்கள்கிட்டயும் அதைத்தான் சொல்வேன். ஊட்டி, குலு மணாலினு சில் இடங்களுக்கு போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடுங்க. சம்மரை சமாளிச்ச மாதிரியும் இருக்கும்; புத்துணர்ச்சியோட மறுபடி வொர்க்ல கவனம் செலுத்தவும் முடியும். என்ஜாய்!’’
- மை.பாரதிராஜா
|