நட்பு மொழி
-அறிவுமதி
* காதலுக்குப் பிறகு திருமணம் நட்புக்குப் பிறகு பிறகு என்ன நட்புதான்
 * நீண்ட நேரமாய் பேசிக் கொண்டிருக்கிறோம் ேதநீர் கொண்டுவந்து தந்த அம்மா அவன் தலையை மட்டும் வருடிவிட்டுப் போகிறாள் பாருங்களேன்
* அறியா பருவத்தில் கூட்டாஞ் சோறு அலுவலகப் பருவத்தில் நட்புச் சோறு
* என் பெற்றோரிடம் அவன் பேசினான் அவன் அண்ணனிடம் நான் பேசினேன் நிழற்படம் எடுக்கும் குழுவோடு இதோ காட்டிற்குள் போய்க் கொண்டிருக்கிறோம்
* தொடர்வண்டிப் பயணத்தில் எதிரில் ஒரு பையன் உற்று உற்றுப் பார்த்தான் பார்த்தேன் பதற்றப்பட்டான் பக்கத்தில் போய் அமர்ந்து பேச்சுக் கொடுத்தேன் தெளிந்துவிட்டான்
ஓவியம்: ப்ரத்யூஷ்
|