2017 எப்படி? ஹாட் ஸ்டார்ஸ் எதிர்பார்ப்புகள்
எப்படி போனது 2016? எப்படி வரணும் 2017? கோலிவுட்டின் ஹாட் ஸ்டார்களிடம் பேசினால் கிடைத்தது ஏராள திட்டங்கள்... தாராள பயணங்கள். செய்யத் தவறியது, செய்ய வேண்டியது என கைவசம் ஹேண்ட்சம் ஐடியாக்கள் கொட்டிக் கிடக்குது.
 ஹன்சிகா பிரேயர்!
‘‘எப்பொழுதுமே எனக்கு கடவுள் அருள் உண்டு. அந்த வகையில் 2017 நல்லா இருக்கும்னு நம்பிக்கை. அடுத்த வருஷம் ‘போகன்’ ரிலீஸ் ஆகுது. நியூ இயரை மும்பையில நான் தத்தெடுத்த குழந்தைகளோடுதான் கொண்டாடுவேன். அந்த சந்தோஷம் வேற எதிலும் கிடைக்காது.’’
ஜெயம் ரவியின் விஷ்!
‘‘இதோ ‘வனமகன்’ ஷூட்டிங்கிற்கு அந்தமான் புறப்பட்டுக்கிட்டிருக்கேன். 2015ல ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’னு எனக்கு சக்சஸ் ஆண்டு. ரொம்ப வருஷப் போராட்டத்திற்குப் பிறகு அப்படி ஒரு சக்சஸ் கிடைச்சதை தொடர்ந்து தக்கவைக்க இன்னும் உழைக்கப்போறேன். 2016ம் வருஷம் ‘மிருதன்’ல நல்ல பெயர். அதனால மறுபடியும் சக்தி சௌந்தர்ராஜனோட ‘டிக் டிக் டிக்’ கூட்டணி. ‘போகனு’க்கு வெயிட்டிங். இப்போதைக்கு உழைப்பு, உழைப்பு... இதுதான் தாரக மந்திரம்!’’
 காஜல் அகர்வால் குஷி
‘‘இந்தத் தடவையும் நியூ இயர் செலிப்ரேஷன் எங்க ஊர்தாங்க, அதாவது மும்பை. தங்கை நிஷா, அப்பா, அம்மா எல்லாரும் ராத்திரி 12 மணி வரைக்கும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான். கண்டிப்பா எல்லாரும் சேர்ந்து கோயிலுக்குப் போவோம். சிரஞ்சீவி சார் ரொம்ப வருஷத்துக்கு பின்னாடி நடிக்கற ‘கைதி நம்பர் 150’ ரிலீஸ் ஆகப் போகுது. இந்த வருஷத்து கோல்டன் சான்ஸ், இதுதான். அடுத்து, தமிழ்நாட்டோட தல அஜித் சார் படம். அதுவும் கிட்டத்தட்ட ரெடி. ரெண்டு மாஸ் ஹீரோஸ் படம். சந்தேகம் இல்லாமல் எனக்கு 2017 நல்ல வருஷம்.
சீனுராமசாமி மகிழ்ச்சி!
‘‘2016 மறக்க முடியாத ஆண்டு. ஏனோ என்னோட ‘இடம் பொருள் ஏவல்’ சென்ஸார் ஆகியும் ரிலீஸ் ஆகலை. ரொம்ப உழைப்பைப் போட்ட படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆகுதுனு நிறைய வருத்தம். அந்த சமயத்துலதான் ‘தர்மதுரை’ ஆரம்பம். தமன்னா, ‘தர்மதுரை’ கதையை போன்ல சொல்லி முடிச்ச மறுவிநாடியே நடிக்கறேன்னு சொன்னார். படத்துக்கு பாராட்டுகள் குவிஞ்சது. எனக்கு சினிமாவைத் தவிர ஒண்ணும் தெரியாது. 2017ல நாலு படமாவது பண்ணணும்.’’
 சமந்தா ஹேப்பி
‘‘2016ல நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் அமையணும்.. சமூக சேவையில தீவிரமா இயங்கணும்... குழந்தைகளோட கல்விக்கு நிறைய உதவணும்னு கடந்த வருஷம் நிறைய ரெசல்யூஷன்ஸ் எடுத்திருந்தேன். அதெல்லாம் ஓரளவு நிறைவேறியிருக்கு. புது வருஷம் இன்னும் ஸ்பெஷல்... லைஃப் ஹேப்பியா போகுது!’’
விஷால் இலக்கு!
‘‘புத்தாண்டிலும் மிஷ்கினோட ‘துப்பறிவாளன்’ ஷூட்டிங் போறேன். வருட துவக்கத்தில் வேலை பார்க்கறது சந்தோஷம். பெரிய ஸ்பெஷல் எதிர்பார்ப்புகளும் எதுவும் இல்லை. எப்பொழுதும் நடிகர் சங்கக் கட்டிடக் கனவுதான். எங்க இலக்கை நோக்கி போயிக்கிட்டே இருப்போம்.’’
நந்திதாவின் டார்கெட்
‘‘தெலுங்கில என்ட்ரி ஆனதால் இந்த வருஷம் எனக்கு ஸ்பெஷல். ‘எக்கடிக்கி பொதவு சின்னவாடா’ செம ஹிட். இன்னும் ஓடுது. தமிழ்ல செல்வராகவன் சாரோட ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரகளையா வந்திருக்கு. வருஷத்துக்கு அஞ்சு படமாவது பண்ணணும். மலையாளம், கன்னடம்னு எல்லா மொழிகள்லேயும் புகுந்து ஒரு கலக்கு கலக்கணும்.’’
யோகிபாபு பக்தி!
‘‘இந்த வருஷம் வந்ததும், வரப் போறதுமா சேர்த்து 30 படம் பண்ணிட்டேன். ‘ஆண்டவன் கட்டளை’யில நல்ல பெயர். வருஷா வருஷம் ஒண்ணாம் தேதி திருத்தணி போயிருவேன். முருகப்பெருமானோட அன்னிக்கு நேருக்கு நேர்தான். ‘அப்படியே நல்லபடியா கொண்டுபோய் ஒரு நல்ல பொசிஷன்ல அமர்த்து முருகா’ன்னு கனிஞ்சு உருகுவேன்.’’
- மை.பாரதிராஜா
|