கமென்ட் கோயிந்து



-சக்திவேல் மருதமுத்து

அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்நாக்ஸ் செலவு ரூ.1 கோடி: செய்தி
அப்ப கடைசி வரைக்கும் சட்டசபையில மிக்சர் தட்டோடதான் உக்காந்து இருந்திருப்பாரு போல!

தலைமைச் செயலாளர் வீட்டில் சொல்லாமல் ரெய்டு போனது கண்டனத்துக்குரியது: திருமாவளவன்
சொல்லிட்டுப் போறதுக்கு அவங்க என்ன கபடி விளையாட்டுலயா ரெய்டு போறாங்க?

நிறுத்துவதற்கு சொந்த இடம் இருந்தால் மட்டுமே, நான்கு சக்கர வாகனம் வாங்க முடியும் என சட்டம்: வெங்கைய நாயுடு
அப்டியே, நடப்பதற்கு சொந்த இடம் இருந்தால் மட்டுமே தெருவில் நடக்க வேண்டும்னு ஒரு சட்டத்த போடுங்க தல, ஒரு பய தெருவுல நடக்கக்கூடாது!

ஜெ. மறைவுக்கு வந்து ஆறுதல் சொன்ன தலைவர்களுக்கு நன்றிக் கடிதம் அனுப்பினார் சசிகலா: செய்தி
அடுத்து வர்ற நாடாளுமன்றக் கூட்டத்துல ‘நன்றி சொல்லவே உனக்கு வார்த்தை இல்லை’ன்னு அ.தி.மு.க எம்.பி.க்கள் பாடுவாங்களேன்னு நெனைச்சாதான்...

கழிப்பறை இருக்கும் இடத்தைக் கண்டறிய கூகுள் ஆப்: செய்தி
அப்டியே எந்தக் கழிப்பறையில வாளியும் டப்பாவும் இருக்குன்னு பாக்கறதுக்கும் ஒரு ஆப் கண்டுபுடிங்க கூகுளாண்டவரே!

மார்ச் மாதத்திற்குப் பிறகு ரேஷன் கடைகளில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்: மத்திய அரசு
எது? இந்த ஆறு மாசத்துக்கு உள் தாள் ஒட்டிக் கொடுத்தீங்களே... அந்த ரேஷன் கார்டுக்கா?

ஓவியங்கள்: கண்ணா