மிராக்கிள் டிஸ்டிங்ஷன்!



க்யூட் கதைகளில் கிளாமர், ஹோம்லி என டிஸ்டிங்ஷன் அடித்து நயன்தாரா தமிழ்ச்செல்வியானது மிராக்கிள்தான்.
- ஆர்.சம்பந்தன், கும்பகோணம்.

ட்ரிபிள் செஞ்சுரி ஹீரோ கருண் நாயரின் ஸ்டோரி ஸ்வீப் ஷாட் பரவசம்.
- கு.சிவக்குமார், சென்னை-4.

மெட்ரோ சிட்டி சென்னைக்கு ‘பிளானிங் அவசியம்’ என்று தீர்க்கமாக சொல்லிய கட்டுரைக்கு ரெட்ரோஸ் கிஃப்ட்.
- எஸ்.ஜானகி சுந்தரம், திருநெல்வேலி.

‘பலே வெள்ளையத்தேவா’வில் முதிர்ச்சியான பேச்சில் சசி சென்டம் ஸ்கோர், ஹோம்லி செல்வி தான்யாவின் ப்யூட்டி மாஸ் உற்சாகம்.
- கே.மனிஷா சுதீர், தர்மபுரி.

விலையில்லா கராத்தேவில் ஒவ்வொரு மூவிலும் பிரவலிகா சிஸ்டர்ஸ் தருவது பெண்களுக்கான சிங்க வலிமையோடு கான்ஃபிடன்ஸும்தான்.
- கா.ராதிகா, சென்னை-33

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மேப், சித்தரின் கிரிப்டோகிராபி குறிப்பு என ‘விஜயனின் வில்’லின் விழிபிதுங்கும் மிஸ்ட்ரியால் மார்கழிக் குளிரிலும் திகில் ஜுரம்.
- ஆர்.பி.கண்ணன்குமார், கோவை.

ஃபேஸ்புக் தகவலால் 12 லட்சம் பேர் குவியும் மெக்சிகோ பர்த்டே பார்ட்டி இன்டர்நேஷனல் வைபவமாகிவிட்டதே!
- கி.குந்தவைதேவி, வேலூர்.

‘மாநகர மனிதர்களி’ல் மீன்பாடி வண்டியை தன் நகரும் வீடாக்கி வாழும் கணேசனின் ஸ்டோரி, கடல்காற்றின் குறையாத ஈரச்சிலிர்ப்பு.
- எஸ்.பரிமளா, காரமடை.

மைசூர் திவானாக கறார், ஐதராபாத்தை மீட்கும் தீரம், உலக சுகாதார நிறுவனத்தை உருவாக்கிய பொதுநல வேகம் என ஆற்காடு ராமசாமி முதலியாரின் பணிகள் இமாலய ஆச்சர்யம்.
- வி.சுந்தரவேலன், நாகர்கோவில்.

ஹாட் ட்ரெண்டிங் இளசுகளின் நாடி பிடித்து ஃபேஷன் பல்ஸ் சொன்ன பிரியாவின் பேட்டி அசத்தல் பர்ச்சேஸ் கைடு.
- டி.அனுகீர்த்திகா, புதுச்சேரி.

பீர்மேடு சாலையில் மழைப்பயணத்தில் அறிவை விலக்கி இயற்கையை உள்வாங்கும் ‘முகங்களின் தேசம்’ யாத்ரீகர்களின் வழிகாட்டி.
- பு.வசந்தம் மணி, திருப்பூர்.

அறம், மனிதர்கள், கேள்விகள் என மனசாட்சியின் தனித்துவக்குரலாக ஷோபா சக்தியின் ‘Download மனசு’ அழுத்தமான கதைச்சித்திரம்.
- மோ.ஜனகராஜ், சேலம்.

சௌம்யா, ராம் பார்த்தசாரதி என இரு பாடகர்களின் பிளஸ், மைனஸ் கறார் ரிவ்யூவில் அசோக் சுப்ரமணியத்தின் ‘சீஸன் சாரல்’, பர்ஃபெக்ட் ஃபில்டர் காபி.
- ஜி.எம்.சீதாராமன், சென்னை-2.

‘குங்குமம் டாக்கீஸி’ன் கோலிவுட் 360 டிகிரி டீட்டெய்ல் அனைத்தும் மொறுமொறு மசாலா பாப்கார்ன்.
- கே.எம்.விபானா, திருவனந்தபுரம்.