ஸ்மார்ட் க்யூட்டி!
ஸ்மார்ட் க்யூட்டி!
- ரீடர்ஸ் வாய்ஸ்
 சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு நிர்பய் தாக்கூர் சூப்பர் எக்சாம்பிள். - அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
பெண்கள் கிரிக்கெட் டீமின் கேப்டன் மித்தாலி ராஜை மிராக்கிள் என்றுதான் சொல்லவேண்டும். பெண் கிரிக்கெட்டின் ஹிஸ்டரியை சொன்ன கட்டுரை சூப்பர். - ஆனி அஞ்சலின், விநாயகபுரம்; த.சத்தியநாராயணன், சென்னை; மயிலை கோபி, அசோக்நகர்; சண்முகராஜ், சென்னை; நவீன்சுந்தர், திருச்சி; மாணிக்கவாசகம், கும்பகோணம்.
ஏழைமக்களின் வயிறு காயாமல் காத்த ரேஷன்கடைகளை மூடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை. மத்திய அரசின் ரேஷன் கடை மூடும் அடாவடித்தனத்தை சுட்டிக்காட்டிய குங்குமத்திற்கு சபாஷ்! - ஆர்.சண்முகராஜ், சென்னை;
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி;
ஃபேஷன் உலகின் குட்டிச்சுட்டி ஸ்மார்ட் க்யூட்டி! - பூதலிங்கம், நாகர்கோவில்; லட்சுமிநாராயணன், வடலூர்.
ஆசிட்டால் வாழ்க்கை இழந்தது ரிதுராய் போல எத்தனை பெண்களோ, படிக்கும்போது நெஞ்சம் கனக்கிறது. - தா.சைமன்தேவா, விநாயகபுரம்.
‘காலச்சுவடு கண்ண’னின் பேட்டியில் அவரது ஆழமான பதிப்பு அனுபவத்தையும், இலக்கியச்சுவையையும் இனிதே பதிந்த முதிர்ந்த பேச்சு அருமை. கரிச்சான் குஞ்சு, க.நா.சு போன்ற மூத்த எழுத்தாளர்களின் நூல்களை அற்புதமான டிசைனில் பதிப்பித்து வழங்கும் காலச்சுவடு இலக்கியத்திற்கு காமதேனுதான். - லட்சுமி நாராயணன், வடலூர்; கே.எஸ்.குமார், விழுப்புரம்; பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்.
வியாசர்பாடியில் புதிய கால்பந்து வீரர்களை உருவாக்கி வரும் தங்கராஜ், உமாபதி, சுரேஷ் பாராட்டுக்குரியவர்கள். - கே.எஸ்.குமார், விழுப்புரம்; சைமன்தேவா, விநாயகபுரம்; த.சத்தியநாராயணன், சென்னை; சிம்மவாஹினி, வியாசர்பாடி.
மின்சாரம் இல்லாமலேயே ஃபிரிட்ஜா... அசத்துகிறார் டெல்லியின் இளம் விஞ்ஞானி தீக்ஷிதா குல்லர். - பூதலிங்கம், நாகர்கோவில்.
‘பேரழகியின் புகைப்படம்’ என்ற நாராயணி கண்ணகி சிறுகதை பசுமரத்து ஆணியாய் நெஞ்சில் பதிந்தது. - கொ.சி.சேகர், பெங்களூரு.
காஷ்மீரின் நகரிலுள்ள உல்கர் நதியை தூய்மை செய்யும் இளைஞர் பிலால் அகமதுவின் அரிய பணி போற்றப்படவேண்டியது அவசியம். - சண்முகராஜ், சென்னை.
காதல் இவ்வளவு வீரியமானதா என பீதிகொள்ள வைத்தது ‘காசு வேண்டாம் காதல் போதும்’ ஸ்டோரி. - மயிலை கோபி, அசோக்நகர்.
‘கவிதை வன’த்தில் சந்தேகம், அதிசயம் என்ற இரு கவிதைகளும் அருமை. - சேவுகப்பெருமாள், பெருமகளூர்.
உயிரைக் குடிக்கும் ப்ளூவேல் பூதம் பற்றி முன்னதாகவே வார்னிங் தந்திருப்பது குங்குமத்தின் அக்மார்க் சமுதாய அக்கறை. - இரா.கல்யாணசுந்தரம், அனுப்பானடி; வள்ளிகுமாரசாமி, அசோக்நகர்; மாணிக்கவாசகம், கும்பகோணம்; மனோகர், கோவை.
அட்டையில்: அதிதி படம்: ஆண்டன் தாஸ்
|