தரமணி கிட்டத்தட்ட கொரில்லா ஃபி லி ம் மேக்கிங்...
- மை.பாரதிராஜா
 தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் வசந்த் ரவி
‘‘எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸான பாரதிராஜா, வைரமுத்து, ரஜினி இவங்க மூணு பேருமே ‘தரமணி’யை பார்த்துட்டாங்க. அதிலும் பாரதிராஜா சார், ரிலீஸுக்கு முன்னாடியே பார்த்துட்டு என்னை அவர் ஆபீஸுக்கு கூப்பிட்டு ரொம்பவே பாராட்டினார். வைரமுத்து சாருக்கும் பயங்கர சந்தோஷம். ‘நீ மெச்சூர்டா பண்ணியிருக்க. கேரக்டராகவே வாழ்ந்திருக்க’னு கைகுலுக்கினார். அதே மாதிரி ரஜினி சாரும், ‘ஐ லவ் த ஃபிலிம். எக்ஸலன்ட் பர்ஃபாமென்ஸ். ஹேட்ஸ் ஆஃப்’னு என்கரேஜ் பண்ணினார்.
 என்னோட முதல் படத்திலேயே இவ்வளவு பாராட்டு கிடைச்சிருக்குனு நினைக்கிறப்ப சந்தோஷமா இருக்கு...’’ மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக பூரிக்கிறார் ‘தரமணி’ ஹீரோ வசந்த் ரவி. ‘‘பூர்வீகம் திருநெல்வேலி. அப்பா பிசினஸ்மேன். பொறந்து வளர்ந்தது , ஸ்கூல் படிச்சதெல்லாம் நம்ம சென்னைலதான். சின்ன வயசுலேந்தே நடிப்புல ஆர்வம். ஆனா, வீட்டுல அதை என்கரேஜ் பண்ணல. லண்டன்ல ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் படிச்சேன். அப்புறம் சென்னைல ஒரு ஹாஸ்பிட்டல்ல மேனேஜரா ஒர்க் பண்ணினேன்.
ஆக்ட்டிங்ல ஆர்வம் இருக்கறப்ப, மத்த ஒர்க்ல எப்படி இன்ட்ரஸ்ட் வரும்? அதனால நடிப்பில் கவனம் செலுத்தலாம்னு தோணுச்சு. ஆனா, வீட்டுல எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அதையும் மீறி மும்பை அனுபம்கெர் ஆக்டிங் ஸ்கூல்ல டிப்ளமோ கோர்ஸ் முடிச்சேன். சரியா அப்பதான் இயக்குநர் ராம் சார் இந்த புராஜெக்ட் ஆரம்பிக்கப் போறார்னு கேள்விப்பட்டு, ஆடிஷன் போனேன். செலக்ட் ஆனேன்...’’ என்று சொல்லும் வசந்த் ரவி, முதல் நாள் கேமரா முன் நிற்க அச்சப்படவில்லையாம்.
‘‘அதுக்குக் காரணம் ராம் சார் கொடுத்த தைரியம்தான். மூ ன்றரை வருஷங்களுக்கு முன்னாடி தொடங்கின படம், இப்பதான் ரிலீஸ் ஆகியிருக்கு. 85 நாட்கள் ஷூட்டிங் நடந்துச்சு. ஆனா, அது தொடர்ச்சியா நடக்கல. மாசத்துல ஒரு வாரம் ஷூட்டிங் போவோம். அப்புறம் எடுத்ததை ராம் சார் எடிட் பண்ண ஆரம்பிச்சிடுவார். அவர் கூடவே எடிட் ஷூட்ல உட்கார்ந்திருப்பேன். மறுபடியும் அதை ரீ ஒர்க் பண்ண சொல்லுவார். மாடுலேஷன் இன்னும் மாத்தணும்னு சொல்லித் தருவார்.
இப்படி நடிப்பின் நுணுக்கங்கள் பத்தி நிறைய அவர்கிட்ட கத்துக்கிட்டேன். படம் இவ்வளவு வருஷம் தாமதமானாலும், நான் இம்ப்ரூவ் பண்றதுக்கான ஒரு காலகட்டமா இந்த இடைவெளியை பார்க்கறேன். ‘தரமணி’ கிட்டத்தட்ட கொரில்லா ஃபிலிம் மேக்கிங் ஸ்டைல்ல எடுக்கப்பட்டது. படத்தோட முழு ஸ்கிரிப்ட்டும் ராம் சார் மைண்ட்ல இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட் போன பிறகுதான் டயலாக்கே ப்ராக்டீஸ் பண்ணுவோம்.
 படத்துல நான் அடிவாங்குற சீன்ல எல்லாம் நிஜமாகவே அடி வாங்கினேன். கடல்ல ஷூட் பண்ற சீனுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி, ‘நீச்சல் கத்துக்குங்க. அடுத்த வாரம் கடல்ல ஷூட் பண்ணப் போறோம்’னு ராம் சார் சொன்னார். ஆனா, அங்கே போனதும் கடல்ல குதிக்கற சீன் எடுத்தாங்க. இப்படி கடல்ல பயமில்லாமல் குதிச்சது ஒரு புது அனுபவம்.
‘உங்க பர்ஃபார்ம் ரொம்ப நல்லா இருக்கு’னு ஆண்ட்ரியாவும், அஞ்சலியும் பாராட்டினாங்க. எல்லா கிரெடிட்டும் ராம் சாருக்குதான் போய்ச் சேரணும். இப்ப என்னைத் தேடி நிறைய ஸ்கிரிப்ட்ஸ் வருது. எதையும் இன்னும் படிக்கல. ஒரு ரெண்டு வாரமாவது ‘தரமணி’ சக்சஸ் மழைல நனைய ஆசைப்படறேன்...’’ பூரிப்புடன் சொல்கிறார் வசந்த் ரவி
|