விவசாயக் கடன் மோசடி!
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சர்க்கரை ஆலை வணிகர் விவசாயத்தின் பெயரில் வாங்கிய ரூ.5 ஆயிரத்து 400 கோடியை பிஸினஸில் முதலீடு செய்து முறைகேடு செய்துள்ள விவகாரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 ‘‘போலி விவசாயி களின் பெயர்களை வைத்து ஆவணங்களைத் தயாரித்த ரத்னாகர் குட்டே என்ற வணிகர், ரூ.5 ஆயிரத்து 400 கோடி மோசடி செய்துள்ளார்...’’ என குற்றச்சாட்டை கிளப்பி யுள்ளார் மகாராஷ்டிரா எதிர்க்கட்சித் தலைவர் (NCP) தனஞ்செய் முண்டே. பர்பானி மாவட்டத்தைச் சேர்ந்த ரத்னாகர் குட்டே, கங்காகெட் சுகர் மற்றும் எனர்ஜி நிறுவனத்தை நடத்தி வந்தார். 2015ம் ஆண்டு இவர், 600 போலி விவசாயிகளின் பெயரில் வங்கியில் கடன் கோரிப்பெற்று தன் சகோதர நிறுவனங்களில் முதலீடு செய்தார். இது குறித்து ரத்னாகர் மீது குற்றம்சாட்டி புகார் பதிவானாலும் இன்னும் கைது செய்யப்படவில்லை. விசாரணைக் கமிஷன் அமைக்கக் கோரி எதிர்க்கட்சிகள் மாநில அரசைநிர்ப்பந்தித்து வருகின்றன.
- ரோனி
|