14 வயது எஞ்சினியர்!



அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியரான தனிஷ்க் ஆப்ரஹாம், பதினான்கு வயதில் பயோமெடிக்கல் எஞ்சினியரிங் பட்டம் பெற்று பிரமிக்க வைத்துள்ளார். ஆப்ரஹாம் தன் பதினொரு வயதிலேயே கலிஃபோர்னியா கல்லூரியில் பட்டம் பெற்று சாதித்த ஜூனியர்  சாதனையாளர். ‘‘பனிரெண்டு வயதில் பொறியியல் படிக்கத் தொடங்கி இதோ பதினான்கு வயதில் முடித்துவிட்டேன்!’’ என  உற்சாகமாகிறார் தனிஷ்க் ஆப்ரஹாம்.

யுசிடேவிஸ் மெடிக்கல் சென்டரில் பிஹெச்.டி படிக்க இப்போது விண்ணப்பம் அனுப்பியுள்ளார். ஆப்ரஹாம் ஐந்து வயதிலேயே  ஸ்டான்ஃபோர்டின் சிறப்பு குழந்தைகளுக்கான கல்வியை (EPGY) நிறைவு செய்தவர். வேதியியல், புவியியல், உயிரியல், வானியல் என  அனைத்திலும் டாப் இடம் பிடித்தவர். இப்படி படிப்பது குழந்தைகளின் இயல்பான தன்மையைப் பாதிக்காதா? ‘‘இயல்பான குழந்தைகளின்  தன்மையை ஆப்ரஹாம் இழந்ததாக நாங்கள் கருதவில்லை. இயல்பு, இயல்பற்றது என குழந்தைகளிடம் எதனைக் கூறுவீர்கள்?’’ என  திருப்பிக் கேட்கிறார் ஆப்ரஹாமின் அம்மா தஜி ஆப்ரஹாம்.  

- ரோனி