தங்க மிட்டாய்!



எந்த விழாவாக இருந்தால் என்ன... மிட்டாய்கள், இனிப்பு, கார பலகாரங்கள் எடுத்து கொண்டாடாமல் ஸ்பெஷல் தினங்கள் ருசிக்குமா  என்ன? குஜராத்தின் சூரத்திலும் அப்படியொரு தங்க இனிப்பு ரெடியாக இருந்தது.

24 கேரட் தங்கக் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த இனிப்பின் விலை ஒரு கிலோ ரூ.9 ஆயிரம். யாரும் வாங்குவார்களோ இல்லையோ,  கடைக்காரர் பிரின்ஸ் இதனை வாங்கி வைத்திருக்கிறார். “இனிப்புகளை வெள்ளிக் காகிதங்களில் வைப்பதைவிட தங்கக் காகிதங்களில்  மூடி வைப்பது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது...” என்கிறார் பிரின்ஸ். ராகியின் புது ரகமா? என்பவர்கள் கூட விலையைக் கேட்டதும்  உடனே அந்த இடத்தை காலி செய்துவிடுகிறார்கள் என்பதே கடைக்காரர்களின் வருத்தம். பர்சை பழுக்க வைத்தால் எப்படி பாஸ்?!

தொகுப்பு: ரோனி