இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி!



உலகமயமாக்கல் கொள்கை 1991ல் அறிமுகமானபின் இந்தியாவின் வளர்ச்சி இரட்டை இலக்கங்களைத் தொடுவதே அரிய நிகழ்வு  என்றானது.

இந்நிலையில் அண்மையில் புள்ளியியல்துறை (MOSPI) வெளியிட்ட அறிக்கையில் இந்தியா 2006 - 07 காலகட்டத்தில் 10.08%  பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (காங்கிரஸ்) ஆட்சிசெய்த  காலகட்டத்தில் பிரதமராக இருந்தவர் மன்மோகன்சிங். 2004 - 05; 2011 - 2012 காலகட்ட பொருட்களின் விலையை ஒப்பீடு செய்த தேசிய  புள்ளியல்துறை கமிஷன், பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டு இவ்வுண்மையை கண்டறிந்துள்ளது.

இதற்கு முன்பு 1988 - 89 காலகட்டத்தில் ராஜீவ்காந்தி ஆட்சிகாலத்தில் இந்தியா 10.2 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டியது.  “தொண்ணூறுகளுக்குப் பிறகான பொருளாதாரச் சீர்திருத்த விளைவுகளைச் சமாளித்து வளர்ச்சி சதவிகிதம் அதிகரித்தது ஐக்கிய  முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில்தான்!” என்று கூறியுள்ள அறிக்கை, பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவான பல்வேறு  அறிவுரைகளையும் இதில் வழங்கியுள்ளது.

-ரோனி