Q&A-உங்க மாமியார்கிட்ட பிடிச்ச விஷயம் என்ன?



‘‘சுந்தர் அம்மா எனக்கும் அம்மாதான்! அவங்களை அத்தைனு எப்பவும் நான் கூப்பிட்டதே இல்ல!வீட்ல சில நேரங்கள்ல நாங்க ஜாலியா டாம் அண்ட் ஜெர்ரியா இருப்போம். பொதுவா, அம்மாவுக்கும் மகளுக்கும் சண்டை நடக்கும் இல்லையா... அதுமாதிரிதான் எங்களுக்குள்ள அப்பப்ப நடக்கும்.ஆனா, இன்னிக்கு சண்ட போட்டா அடுத்தநாளே மறந்துடுவோம். அவங்க பத்து வார்த்தை பேசினா நான் ரெண்டு வார்த்தை பேசிடுவேன்!

எங்க அம்மாவும் சரி, எங்க அத்தையும் சரி, ரெண்டு பேர் வயசையும் ஒப்பிட்டா அவங்க குழந்தை போலதான். அதனாலேயே அவங்க எப்ப எது சொன்னாலும் மறுத்துப் பேசுறதில்ல. கேட்டுக்குவேன்!எங்க அத்தைக்கு அவங்க மகன் சுந்தர்.சி படங்கள் மட்டுமே பிடிக்கும். சுந்தர்.

சினு பெயர் இருக்கற படங்கள் எல்லாத்தையும் பார்த்துடுவாங்க! இப்ப ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியல்ல கூட அவங்க பார்க்கணும்ங்கறதுக்காகவே கதை சுந்தர்.சி.னு டைட்டில்ல போட்டிருக்கோம்!வேற வழியே இல்ல... இப்ப அவங்களும் சீரியலை கண்டிப்பா பார்த்தே ஆகணும்!’’ கலகலக்கிறார் குஷ்பு.